• Sep 20 2024

சம்பந்தன் இனி கூட்டமைப்பின் தலைவர் இல்லை; விரைவில் புதிய தலைவர்! - சுரேந்திரன் அதிரடி அறிவிப்பு

Chithra / Jan 22nd 2023, 8:09 pm
image

Advertisement

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இரா.சம்பந்தன் தற்போது தலைவரில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து தமிழ் அரசு கட்சி வெளியேறியதுடன், சம்பந்தனின் பதவி வறிதாகிவிட்டது. விரைவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என  தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று (22) நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் குத்து விளக்கு சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றி, ஒற்றுமையை விரும்பும் மக்களின் வெற்றியென சுட்டிக்காட்டினார்.

அத்துடன், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு தற்போது தலைவராக இரா.சம்பந்தன் செயற்படவில்லையென்றும் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசியலமைப்பின் 13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் சமஸ்டி முறை நோக்கி செல்லுவது சாத்தியமற்றது.

13 வது அரசியல் திருத்தம் எங்களுடைய தீர்வல்ல என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கின்றோம். ஆனால் 13 வது அரசியலமைப்பு யாப்பில் இருக்கும் அதிகாரங்களை நடைமுறைப்படுத்தாமல் அதைத் தாண்டிய சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வை நோக்கி நாங்கள் நகர்வது என்பது சாத்தியமற்ற ஒன்று என தெரிவித்துள்ளார்.

அத்துடன், யாழ் மாநகரசபை முதல்வர் வேட்பாளராக எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவு செய்யப்படவில்லையென்றும் தெரிவித்தார்.

சம்பந்தன் இனி கூட்டமைப்பின் தலைவர் இல்லை; விரைவில் புதிய தலைவர் - சுரேந்திரன் அதிரடி அறிவிப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இரா.சம்பந்தன் தற்போது தலைவரில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து தமிழ் அரசு கட்சி வெளியேறியதுடன், சம்பந்தனின் பதவி வறிதாகிவிட்டது. விரைவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என  தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்தார்.யாழ்ப்பாணத்தில் இன்று (22) நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் குத்து விளக்கு சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றி, ஒற்றுமையை விரும்பும் மக்களின் வெற்றியென சுட்டிக்காட்டினார்.அத்துடன், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு தற்போது தலைவராக இரா.சம்பந்தன் செயற்படவில்லையென்றும் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,அரசியலமைப்பின் 13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் சமஸ்டி முறை நோக்கி செல்லுவது சாத்தியமற்றது.13 வது அரசியல் திருத்தம் எங்களுடைய தீர்வல்ல என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கின்றோம். ஆனால் 13 வது அரசியலமைப்பு யாப்பில் இருக்கும் அதிகாரங்களை நடைமுறைப்படுத்தாமல் அதைத் தாண்டிய சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வை நோக்கி நாங்கள் நகர்வது என்பது சாத்தியமற்ற ஒன்று என தெரிவித்துள்ளார்.அத்துடன், யாழ் மாநகரசபை முதல்வர் வேட்பாளராக எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவு செய்யப்படவில்லையென்றும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement