• Sep 20 2024

மலை உச்சியில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் வெளியான தகவல் samugammedia

Chithra / Aug 1st 2023, 10:38 pm
image

Advertisement

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிறேட் வெஸ்டன் கல்கந்தை தோட்டத்தின் ஊடாக செல்லும் வனப்பகுதியில் இனந்தெரியாத பெண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று மாலை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

கல்கந்தை மலை உச்சியில் பெண் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக லிந்துலை மற்றும் தலவாக்கலை பொலிசாருக்கு தகவல் கிடைக்கப்பெற்ற நிலையில் மலை உச்சிக்கு சென்ற பொலிசார் அங்கு பெண்ணின் சடலத்தை மீட்டுள்ளனர்.

அத்துடன் பல்கலைகழக மாணவர்கள் ஆராய்ச்சிக்காக அடிக்கடி கிறேட் வெஸ்டன் கல்கந்தை மலை உச்சிக்கு வருகை தருவார்கள்.இவ்வாறு வருகை தந்து ஆராய்ச்சி செய்யும் ஒரு குறித்த பகுதியில் இந்த சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்திருக்கும் லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் நுவரெலியா நீதி மன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு நீதவான் வருகை தந்து மரண விசாரணை செய்த பின் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதணைக்கு கொண்டு செல்லப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

மலை உச்சியில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் வெளியான தகவல் samugammedia லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிறேட் வெஸ்டன் கல்கந்தை தோட்டத்தின் ஊடாக செல்லும் வனப்பகுதியில் இனந்தெரியாத பெண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று மாலை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.கல்கந்தை மலை உச்சியில் பெண் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக லிந்துலை மற்றும் தலவாக்கலை பொலிசாருக்கு தகவல் கிடைக்கப்பெற்ற நிலையில் மலை உச்சிக்கு சென்ற பொலிசார் அங்கு பெண்ணின் சடலத்தை மீட்டுள்ளனர்.அத்துடன் பல்கலைகழக மாணவர்கள் ஆராய்ச்சிக்காக அடிக்கடி கிறேட் வெஸ்டன் கல்கந்தை மலை உச்சிக்கு வருகை தருவார்கள்.இவ்வாறு வருகை தந்து ஆராய்ச்சி செய்யும் ஒரு குறித்த பகுதியில் இந்த சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்திருக்கும் லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.மேலும் சம்பவம் தொடர்பில் நுவரெலியா நீதி மன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு நீதவான் வருகை தந்து மரண விசாரணை செய்த பின் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதணைக்கு கொண்டு செல்லப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement