• Jul 09 2024

சாந்தனை விடுவிக்க வலியுறுத்தி தாயார் வெளிவிவகார அமைச்சிற்கு கடிதம்! samugammedia

Tamil nila / Sep 24th 2023, 6:16 pm
image

Advertisement

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு  32 வருடங்களாக சிறையில் இருந்து விடுதலை பெற்று  கடந்த 10 மாதங்களாக சிறப்பு முகாமில் தனி அறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சாந்தன் அவர்களின் தாயாகிய தில்லையம்பலம் மகேஸ்வரி (வயது - 77)  அவர்கள் தனது மகனை தன்னிடம் கொண்டு வந்து சேர்க்கும்படி குறிப்பிட்ட கடிதத்தை  யாழ் மாவட்டச் செயலகம் ஊடாக வெளிவிவகார அமைச்சிற்கு அனுப்பி வைத்தார்.

இக் கடிதமானது, கடந்த 10 மாதங்களில் வெளிவிவகார அமைச்சிற்கு இவர் அளிக்கும்  5 வது கடிதமாகும். இதுவரை கொடுக்கும் கடிதங்களுக்கு எப்பதிலும்  கிடைப்பதில்லை என அவர் குறிப்பிட்டார்.

கடந்த வாரம் இந்திய மத்திய அரசு நீதிமன்றத்திற்கு அளித்த பதிலில்  2022 ம் ஆண்டு டிசம்பர் மாதமே இலங்கை வெளிவிவகார அமைச்சிடம்,  இவர்களை அடையாளப்படுத்தும் ஆவணங்களைக் கேட்டு பொறுப்பளித்து  விட்டதாக தெரிவித்திருந்தார்கள்.

சாந்தன் அவர்களின் கையில் இலங்கைக் கடவுச் சீட்டு இருப்பதுடன்  ”தான் அளிக்கும் கடிதங்களுடன் அவரது பிறப்புச் சான்றிதழையும் இணைத்தே அனுப்புவதாக”  சாந்தனின் குடும்பத்தார் தெரிவித்திருக்கின்றனர்.

சாந்தனை விடுவிக்க வலியுறுத்தி தாயார் வெளிவிவகார அமைச்சிற்கு கடிதம் samugammedia ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு  32 வருடங்களாக சிறையில் இருந்து விடுதலை பெற்று  கடந்த 10 மாதங்களாக சிறப்பு முகாமில் தனி அறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சாந்தன் அவர்களின் தாயாகிய தில்லையம்பலம் மகேஸ்வரி (வயது - 77)  அவர்கள் தனது மகனை தன்னிடம் கொண்டு வந்து சேர்க்கும்படி குறிப்பிட்ட கடிதத்தை  யாழ் மாவட்டச் செயலகம் ஊடாக வெளிவிவகார அமைச்சிற்கு அனுப்பி வைத்தார்.இக் கடிதமானது, கடந்த 10 மாதங்களில் வெளிவிவகார அமைச்சிற்கு இவர் அளிக்கும்  5 வது கடிதமாகும். இதுவரை கொடுக்கும் கடிதங்களுக்கு எப்பதிலும்  கிடைப்பதில்லை என அவர் குறிப்பிட்டார்.கடந்த வாரம் இந்திய மத்திய அரசு நீதிமன்றத்திற்கு அளித்த பதிலில்  2022 ம் ஆண்டு டிசம்பர் மாதமே இலங்கை வெளிவிவகார அமைச்சிடம்,  இவர்களை அடையாளப்படுத்தும் ஆவணங்களைக் கேட்டு பொறுப்பளித்து  விட்டதாக தெரிவித்திருந்தார்கள்.சாந்தன் அவர்களின் கையில் இலங்கைக் கடவுச் சீட்டு இருப்பதுடன்  ”தான் அளிக்கும் கடிதங்களுடன் அவரது பிறப்புச் சான்றிதழையும் இணைத்தே அனுப்புவதாக”  சாந்தனின் குடும்பத்தார் தெரிவித்திருக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement