• Sep 30 2024

சவுதியில் இறந்த மனைவியின் உடலை மீட்டுத்தருமாறு கணவன் கண்ணீர் மல்க கோரிக்கை!

Tamil nila / Sep 29th 2024, 9:43 pm
image

Advertisement

வவுனியா ஆண்டியாபுளியங்குளம் பகுதியில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் சவுதிநாட்டில் உயிரிழந்துள்ள நிலையில் அவரது உடலை மீட்டுத்தருமாறு கணவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக அவரது கணவர் தெரிவிக்கையில்….

எனது மனைவி கடந்த இருவருடங்களுக்கு முன்பாக வேலை விசாவில் சவுதி அரேபியாவிற்கு சென்றார். அனுராதபுரம் பகுதியில் உள்ள முகவர் ஒருவரின் ஊடாகவே அவர் பயணம் செய்துள்ளார்.

பயணம்செய்த நாளில்இருந்து இதுவரை காலமும்  சாதாரண தொலைபேசியில் தான் எம்மோடு கதைத்து வந்தார்.அவரது முகத்தை கூட நாம் பார்க்கவில்லை. கடந்த சில நாட்களாக  தனக்கு அங்கு சித்திரவதை இடம்பெறுவதாகவும் தன்னை உடனடியாக நாட்டுக்கு திருப்பி எடுக்கமாறும் கூறினார். இது தொடர்பாக பல தடவை அவரை அனுப்பிய முகவரிடம் கூறியும் உரிய பதிலை அவர் தரவில்லை. இந்நிலையில் எனது மனைவி சிலநாட்களாக என்னுடன் தொடர்பினை ஏற்ப்படுத்தவில்லை. 

நாம் முகவரை அணுகியபோது அவர்சுகவீனமடைந்து இருப்பதா எமக்கு தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார்கள். அவர் இறந்து 15 நாட்களின் பின்னரே எமக்கு தகவல் வழங்கப்பட்டது. 

தற்போது மரணமடைந்து 40நாட்கள் கடக்கின்ற நிலையில் எனது மனைவியின் உடலை கொண்டு வருவதற்கான எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. 

எனவே அவரது சடலத்தையாவது விரைவாக பெற்றுத்தருவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.குறித்த சம்பவத்தில் நிலூபா வயது 38 என்ற மூன்று பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளதாக அவரது கணவர் தெரிவித்துள்ளார்.

சவுதியில் இறந்த மனைவியின் உடலை மீட்டுத்தருமாறு கணவன் கண்ணீர் மல்க கோரிக்கை வவுனியா ஆண்டியாபுளியங்குளம் பகுதியில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் சவுதிநாட்டில் உயிரிழந்துள்ள நிலையில் அவரது உடலை மீட்டுத்தருமாறு கணவர் கோரிக்கை விடுத்துள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பாக அவரது கணவர் தெரிவிக்கையில்….எனது மனைவி கடந்த இருவருடங்களுக்கு முன்பாக வேலை விசாவில் சவுதி அரேபியாவிற்கு சென்றார். அனுராதபுரம் பகுதியில் உள்ள முகவர் ஒருவரின் ஊடாகவே அவர் பயணம் செய்துள்ளார்.பயணம்செய்த நாளில்இருந்து இதுவரை காலமும்  சாதாரண தொலைபேசியில் தான் எம்மோடு கதைத்து வந்தார்.அவரது முகத்தை கூட நாம் பார்க்கவில்லை. கடந்த சில நாட்களாக  தனக்கு அங்கு சித்திரவதை இடம்பெறுவதாகவும் தன்னை உடனடியாக நாட்டுக்கு திருப்பி எடுக்கமாறும் கூறினார். இது தொடர்பாக பல தடவை அவரை அனுப்பிய முகவரிடம் கூறியும் உரிய பதிலை அவர் தரவில்லை. இந்நிலையில் எனது மனைவி சிலநாட்களாக என்னுடன் தொடர்பினை ஏற்ப்படுத்தவில்லை. நாம் முகவரை அணுகியபோது அவர்சுகவீனமடைந்து இருப்பதா எமக்கு தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார்கள். அவர் இறந்து 15 நாட்களின் பின்னரே எமக்கு தகவல் வழங்கப்பட்டது. தற்போது மரணமடைந்து 40நாட்கள் கடக்கின்ற நிலையில் எனது மனைவியின் உடலை கொண்டு வருவதற்கான எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. எனவே அவரது சடலத்தையாவது விரைவாக பெற்றுத்தருவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.குறித்த சம்பவத்தில் நிலூபா வயது 38 என்ற மூன்று பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளதாக அவரது கணவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement