• Sep 19 2024

வடக்கில் 100 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் திட்டம்! விமானம்,கப்பற்சேவைகள் விரைவில்! இந்திய மத்திய இணை அமைச்சர் யாழில் தெரிவிப்பு

Chithra / Feb 11th 2023, 12:18 pm
image

Advertisement

ஒருவரின் வாழ்நாள் முழுவதும் அழியாமல் துணை நிற்பது கல்வி ஒன்று மட்டுமே. செல்வமோ அல்லது நண்பர்களோ என்றும் நிலையானது இல்லை என இந்தியாவின் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது அயலவர்களுக்கு முதலிடம் என்ற திட்டத்தின் கீழ் இந்தியா பல உதவிகளை வழங்கியுள்ளதாக அமைச்சர் எல்.முருகன் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாண கலாசார மையத்தினை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்திய பிரதமரின் வழிகாட்டலுக்கு அமைவாக வடக்கு மாகாணத்திலுள்ள பின் தங்கிய 100 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் திட்டம் ஒன்றையும் ஆரம்பிக்கவுள்ளதாக இந்தியாவின் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குறிப்பிட்டிருந்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு தொடர்வதை போன்று இரு நாட்டு மக்களுக்கு இடையிலான நட்புகளை தொடர்வதற்கு விமான சேவை மற்றும் கப்பற்சேவைகளை இந்தியா விரைந்து முன்னெடுத்து வருவதாக இந்தியாவின் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மேலும் தெரிவித்துள்ளார்.

வடக்கில் 100 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் திட்டம் விமானம்,கப்பற்சேவைகள் விரைவில் இந்திய மத்திய இணை அமைச்சர் யாழில் தெரிவிப்பு ஒருவரின் வாழ்நாள் முழுவதும் அழியாமல் துணை நிற்பது கல்வி ஒன்று மட்டுமே. செல்வமோ அல்லது நண்பர்களோ என்றும் நிலையானது இல்லை என இந்தியாவின் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குறிப்பிட்டுள்ளார்.இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது அயலவர்களுக்கு முதலிடம் என்ற திட்டத்தின் கீழ் இந்தியா பல உதவிகளை வழங்கியுள்ளதாக அமைச்சர் எல்.முருகன் சுட்டிக்காட்டியுள்ளார்.யாழ்ப்பாண கலாசார மையத்தினை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.இந்நிலையில் இந்திய பிரதமரின் வழிகாட்டலுக்கு அமைவாக வடக்கு மாகாணத்திலுள்ள பின் தங்கிய 100 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் திட்டம் ஒன்றையும் ஆரம்பிக்கவுள்ளதாக இந்தியாவின் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குறிப்பிட்டிருந்தார்.இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு தொடர்வதை போன்று இரு நாட்டு மக்களுக்கு இடையிலான நட்புகளை தொடர்வதற்கு விமான சேவை மற்றும் கப்பற்சேவைகளை இந்தியா விரைந்து முன்னெடுத்து வருவதாக இந்தியாவின் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement