போதைப் பாக்கை உண்டு பாடசாலையில் தள்ளாடிய மாணவர்கள் பொலிஸாரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச் சம்பவம் இராகலை பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் நேற்றுமுன்தினம்(18) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஜனவரி மாதம் ஆரம்பமாகவுள்ள க.பொ.த.உயர் தரம் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கு நேற்றுமுன்தினம்(18) குறித்த பாடசாலையில் பரீட்சை அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டது.
இதனையடுத்து பாடசாலை மாணவர்களால் விசேடமாக 'டீஜே' இசை நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் குறித்த இசைநிகழ்வில் கலந்துகொண்ட இரு மாணவர்கள் போதைப்பாக்கை உண்டு நிதானமிழந்து தள்ளாடிய நிலையில்பாடசாலையில் கூச்சலிட்டு ஆடியுள்ளனர்.
இதை அவதானித்த சக மாணவர்கள் குறித்த சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபரிடம் முறையிட்டனர்.
இது தொடர்பில் பாடசாலை அதிபர் சம்பந்தப்பட்ட இரு மாணவர்களை அழைத்து விசாரித்ததுடன் இராகலை பொலிஸாருக்கும் மாணவர்களின் பெற்றோருக்கும் அறிவித்துள்ளார்.
பாடசாலைக்கு வந்த பொலிஸார் மாணவர்களை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு பாடசாலை அதிபர் விடுத்த முறைப்பாட்டுக்கு இணங்க விசாரணையை முன்னெடுத்து குறித்த மாணவர்களின் பெற்றோர்களை பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து மாணவர்கள் தொடர்பில் சம்பவத்தை விளக்கியுள்ளனர்.
இதையடுத்து மாணவர்களின் எதிர்காலம் குறித்து கவனம் செலுத்தி அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த பொலிஸார், அவர்களை பெற்றோர்களிடம் ஒப்படைத்து விடுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Dj இசையில் தள்ளாடிய பாடசாலை மாணவர்கள்.அதிபர் எடுத்த நடவடிக்கை.samugammedia போதைப் பாக்கை உண்டு பாடசாலையில் தள்ளாடிய மாணவர்கள் பொலிஸாரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இச் சம்பவம் இராகலை பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் நேற்றுமுன்தினம்(18) இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,ஜனவரி மாதம் ஆரம்பமாகவுள்ள க.பொ.த.உயர் தரம் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கு நேற்றுமுன்தினம்(18) குறித்த பாடசாலையில் பரீட்சை அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டது.இதனையடுத்து பாடசாலை மாணவர்களால் விசேடமாக 'டீஜே' இசை நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.இந்நிலையில் குறித்த இசைநிகழ்வில் கலந்துகொண்ட இரு மாணவர்கள் போதைப்பாக்கை உண்டு நிதானமிழந்து தள்ளாடிய நிலையில்பாடசாலையில் கூச்சலிட்டு ஆடியுள்ளனர்.இதை அவதானித்த சக மாணவர்கள் குறித்த சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபரிடம் முறையிட்டனர்.இது தொடர்பில் பாடசாலை அதிபர் சம்பந்தப்பட்ட இரு மாணவர்களை அழைத்து விசாரித்ததுடன் இராகலை பொலிஸாருக்கும் மாணவர்களின் பெற்றோருக்கும் அறிவித்துள்ளார்.பாடசாலைக்கு வந்த பொலிஸார் மாணவர்களை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.அங்கு பாடசாலை அதிபர் விடுத்த முறைப்பாட்டுக்கு இணங்க விசாரணையை முன்னெடுத்து குறித்த மாணவர்களின் பெற்றோர்களை பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து மாணவர்கள் தொடர்பில் சம்பவத்தை விளக்கியுள்ளனர்.இதையடுத்து மாணவர்களின் எதிர்காலம் குறித்து கவனம் செலுத்தி அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த பொலிஸார், அவர்களை பெற்றோர்களிடம் ஒப்படைத்து விடுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.