• Sep 17 2024

கொழும்பு துறைமுக நகரத்தில் பாடசாலை, வைத்தியசாலை, பல்கலைக்கழகம்!

Chithra / Aug 14th 2024, 9:24 am
image

Advertisement


கொழும்பு துறைமுக நகரத்தில் திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்திக்காக, காணிகளை குத்தகைக்கு வழங்குவதற்கு முன்மொழியப்பட்ட செயற்பாட்டிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய கொழும்பு துறைமுக நகரத்தில் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலை, பல்கலைக்கழகம் மற்றும் வைத்தியசாலையின் அபிவிருத்திக்காக காணிகளை குத்தகைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் 6(1) (c) பிரிவின் விதிகளின்படி மருத்துவமனை, பாடசாலை மற்றும் பல்கலைக்கழகத்திற்கான காணிகளை குத்தகைக்கு வழங்குவதற்கான ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.


கொழும்பு துறைமுக நகரத்தில் பாடசாலை, வைத்தியசாலை, பல்கலைக்கழகம் கொழும்பு துறைமுக நகரத்தில் திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்திக்காக, காணிகளை குத்தகைக்கு வழங்குவதற்கு முன்மொழியப்பட்ட செயற்பாட்டிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.இதற்கமைய கொழும்பு துறைமுக நகரத்தில் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலை, பல்கலைக்கழகம் மற்றும் வைத்தியசாலையின் அபிவிருத்திக்காக காணிகளை குத்தகைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதன்படி, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் 6(1) (c) பிரிவின் விதிகளின்படி மருத்துவமனை, பாடசாலை மற்றும் பல்கலைக்கழகத்திற்கான காணிகளை குத்தகைக்கு வழங்குவதற்கான ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement