• Nov 25 2024

அழிவின் ஆரம்பம் - வெளியாகும் நச்சு வாயு-ஆராய்ச்சியாளர்கள் எச்சரிகை!

Tamil nila / Sep 6th 2024, 9:35 pm
image

நரகத்தின் நுழைவாயில் என்ற மிகப் பெரிய பள்ளம் ஒன்று சைபீரியாவில் இருக்கும் நிலையில், அது ஒவ்வொரு வருடமும் மிக வேகமாக விரிவடைந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். 

 அதிலிருந்து வெளியாகும் நச்சு வாயுவினால் சுற்றுச்சூழலுக்கு அதிகப் பாதிப்பு ஏற்படும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

 இந்தப் பூமி பல்வேறு வினோதங்களைக் கொண்டுள்ளது. 

 இந்த நிலையில் ரஷ்யா சைபீரியாவில் மிகப் பெரிய பள்ளம் ஒன்று இருக்கின்றது. இதனை ஆராய்ச்சியாளர்கள் "நரகத்தின் நுழைவாயில்" என்று அழைக்கின்றார்கள். 

 இந்த "நரகத்தின் நுழைவாயில்" பருவநிலை மாற்றத்தால் எதிர்பார்த்ததைக் காட்டிலும் வேகமாக விரிவடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இது 200 ஏக்கர் அகலமும் 300 அடி ஆழமும் கொண்டதாகும். 

 ஸ்டிங்ரே மீன் வடிவத்தில் இருக்கும் இது தொடர்ந்து விரிவடைந்து வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 1960 ஆம் ஆண்டுகளில் இது மிகவும் சிறியதாகவே இருந்துள்ளது. 

ஆனால், கடந்த 30 ஆண்டுகளில் இந்தத் துளை மூன்று மடங்கு விரிவடைந்துள்ளதாம்.

 இது முன்பு மிகவும் மெதுவாக விரிவடைந்து வந்த நிலையில் பருவநிலை மாற்றத்தினால் இப்போது வேகமாக விரிவடைய ஆரம்பித்துள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அழிவின் ஆரம்பம் - வெளியாகும் நச்சு வாயு-ஆராய்ச்சியாளர்கள் எச்சரிகை நரகத்தின் நுழைவாயில் என்ற மிகப் பெரிய பள்ளம் ஒன்று சைபீரியாவில் இருக்கும் நிலையில், அது ஒவ்வொரு வருடமும் மிக வேகமாக விரிவடைந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.  அதிலிருந்து வெளியாகும் நச்சு வாயுவினால் சுற்றுச்சூழலுக்கு அதிகப் பாதிப்பு ஏற்படும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்தப் பூமி பல்வேறு வினோதங்களைக் கொண்டுள்ளது.  இந்த நிலையில் ரஷ்யா சைபீரியாவில் மிகப் பெரிய பள்ளம் ஒன்று இருக்கின்றது. இதனை ஆராய்ச்சியாளர்கள் "நரகத்தின் நுழைவாயில்" என்று அழைக்கின்றார்கள்.  இந்த "நரகத்தின் நுழைவாயில்" பருவநிலை மாற்றத்தால் எதிர்பார்த்ததைக் காட்டிலும் வேகமாக விரிவடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 200 ஏக்கர் அகலமும் 300 அடி ஆழமும் கொண்டதாகும்.  ஸ்டிங்ரே மீன் வடிவத்தில் இருக்கும் இது தொடர்ந்து விரிவடைந்து வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  1960 ஆம் ஆண்டுகளில் இது மிகவும் சிறியதாகவே இருந்துள்ளது. ஆனால், கடந்த 30 ஆண்டுகளில் இந்தத் துளை மூன்று மடங்கு விரிவடைந்துள்ளதாம். இது முன்பு மிகவும் மெதுவாக விரிவடைந்து வந்த நிலையில் பருவநிலை மாற்றத்தினால் இப்போது வேகமாக விரிவடைய ஆரம்பித்துள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement