நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் வர்த்தகர்களை குறிவைத்து மேற்கொள்ளப்பட்டுவரும் 'யுக்திய' பொலிஸ் நடவடிக்கையின் கீழ் நேற்று (02) முதல் இன்று (03) காலை வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 1,182 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை 44 சந்தேகநபர்கள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள உத்தரவின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் மற்றும் விசேட அதிரடிப்படையின் பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 138 சந்தேகநபர்கள் இன்றைய நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த விசேட நடவடிக்கையின் போது 287 கிராம் ஹெராயின், 246 கிராம் ஐஸ், கஞ்சா 05 கிலோ 400 கிராம், 19,052 கஞ்சா செடிகள், மாவா 104 கிராம், சாம்பல் 95 கிராம், 119 மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
போதைப்பொருள் வர்த்தகர்களை குறிவைத்து தேடுதல் வேட்டை. 1,182 பேர் கைது.samugammedia நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் வர்த்தகர்களை குறிவைத்து மேற்கொள்ளப்பட்டுவரும் 'யுக்திய' பொலிஸ் நடவடிக்கையின் கீழ் நேற்று (02) முதல் இன்று (03) காலை வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 1,182 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அதேவேளை 44 சந்தேகநபர்கள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள உத்தரவின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இதேவேளை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் மற்றும் விசேட அதிரடிப்படையின் பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 138 சந்தேகநபர்கள் இன்றைய நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த விசேட நடவடிக்கையின் போது 287 கிராம் ஹெராயின், 246 கிராம் ஐஸ், கஞ்சா 05 கிலோ 400 கிராம், 19,052 கஞ்சா செடிகள், மாவா 104 கிராம், சாம்பல் 95 கிராம், 119 மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.