• Apr 15 2026

ரகசியத் திருமணமா? வைரலாகும் ஜெண்டயா - டாம் ஹாலந்து 'AI' புகைப்படங்கள் ;அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Ziya / Mar 18th 2026, 4:09 pm
image

ஹாலிவுட் திரை உலகின் தற்போதைய ஹாட் ஜோடிகளான ஜெண்டயா மற்றும் டாம் ஹாலந்து  ஆகியோரின் திருமணப் புகைப்படங்கள் என்று கூறி சில படங்கள் இணையத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன.

சமூக வலைதளங்களில் 'AK' மற்றும் 'ஜுவான் ரெகுவேரா' போன்ற பயனர்களால் பகிரப்பட்ட இந்தப் புகைப்படங்கள், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டவை.

இத்தாலியின் கோமோ ஏரி பின்னணியில், ராபர்ட் டவுனி ஜூனியர், ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் உள்ளிட்ட பிரபலங்கள் முன்னிலையில் இந்தத் திருமணம் நடப்பது போல அந்தப் படங்கள் தத்ரூபமாக இருந்தன.

ஜிம்மி கிம்மல் நேரடி நிகழ்ச்சியில் இது குறித்துப் பேசிய ஜெண்டயா, "பலரின் இந்தப் படங்களைப் பார்த்து ஏமாந்துவிட்டனர். நான் நிஜ வாழ்க்கையை வெளியே செல்லும் போது மக்கள் வாழ்த்துச் சொல்கிறார்கள். என் சொந்தக்காரர்கள் சிலர் தங்களுக்கு ஏன் அழைப்பிதழ் அனுப்பவில்லை எனக் கோபமடைந்தனர்.ஆனால் அவை அனைத்தும் போலியானவை" என்று விளக்கம் அளித்துள்ளார். நிஜத் திருமணம் குறித்துக் கேட்ட கேள்விக்கு அவர் நேரடியாகப் பதிலளிக்காமல் நழுவிவிட்டார்.

ஆடை வடிவமைப்பாளர் லா ரோச், "திருமணம் ஏற்கனவே முடிந்துவிட்டது" என்று கூறியதும், பாரிஸ் ஃபேஷன் வீக்கில் ஜெண்டயா அணிந்திருந்த தங்க வளையமும் இந்த வதந்திகளுக்குத் தீனி போட்டுள்ளன. 

தற்போது இவர்கள் இருவரும் 'ஸ்பைடர்-மேன்' படத்தின் நான்காம் பாகத்தில் இணைந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் உருவாகும் இத்தகைய 'கலைத்துவ பொழுதுபோக்கு' படங்கள், பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் எப்படியெல்லாம் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி.

ரகசியத் திருமணமா வைரலாகும் ஜெண்டயா - டாம் ஹாலந்து 'AI' புகைப்படங்கள் ;அதிர்ச்சியில் ரசிகர்கள் ஹாலிவுட் திரை உலகின் தற்போதைய ஹாட் ஜோடிகளான ஜெண்டயா மற்றும் டாம் ஹாலந்து  ஆகியோரின் திருமணப் புகைப்படங்கள் என்று கூறி சில படங்கள் இணையத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன.சமூக வலைதளங்களில் 'AK' மற்றும் 'ஜுவான் ரெகுவேரா' போன்ற பயனர்களால் பகிரப்பட்ட இந்தப் புகைப்படங்கள், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டவை.இத்தாலியின் கோமோ ஏரி பின்னணியில், ராபர்ட் டவுனி ஜூனியர், ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் உள்ளிட்ட பிரபலங்கள் முன்னிலையில் இந்தத் திருமணம் நடப்பது போல அந்தப் படங்கள் தத்ரூபமாக இருந்தன.ஜிம்மி கிம்மல் நேரடி நிகழ்ச்சியில் இது குறித்துப் பேசிய ஜெண்டயா, "பலரின் இந்தப் படங்களைப் பார்த்து ஏமாந்துவிட்டனர். நான் நிஜ வாழ்க்கையை வெளியே செல்லும் போது மக்கள் வாழ்த்துச் சொல்கிறார்கள். என் சொந்தக்காரர்கள் சிலர் தங்களுக்கு ஏன் அழைப்பிதழ் அனுப்பவில்லை எனக் கோபமடைந்தனர்.ஆனால் அவை அனைத்தும் போலியானவை" என்று விளக்கம் அளித்துள்ளார். நிஜத் திருமணம் குறித்துக் கேட்ட கேள்விக்கு அவர் நேரடியாகப் பதிலளிக்காமல் நழுவிவிட்டார்.ஆடை வடிவமைப்பாளர் லா ரோச், "திருமணம் ஏற்கனவே முடிந்துவிட்டது" என்று கூறியதும், பாரிஸ் ஃபேஷன் வீக்கில் ஜெண்டயா அணிந்திருந்த தங்க வளையமும் இந்த வதந்திகளுக்குத் தீனி போட்டுள்ளன. தற்போது இவர்கள் இருவரும் 'ஸ்பைடர்-மேன்' படத்தின் நான்காம் பாகத்தில் இணைந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் உருவாகும் இத்தகைய 'கலைத்துவ பொழுதுபோக்கு' படங்கள், பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் எப்படியெல்லாம் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி.

Advertisement

Advertisement

Advertisement