• Nov 22 2024

நாடு முழுவதும் தேர்தலுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிப்பு! குவிக்கப்படும் விசேட அதிரடிப்படையினர்

Chithra / Sep 19th 2024, 11:40 am
image


தேர்தலுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக நாடு முழுவதிலும் 63,000ற்கும் மேற்பட்ட பொலிஸார்  கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். 

அத்துடன், வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காவலரண்களில் 3,250 விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடவுள்ளனர். 

எந்தவொரு சந்தர்ப்பத்திலாவது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் ஒன்று கூடல்களை நடத்துவது மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, நாடு முழுவதிலும் ஒட்டப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பான சுவரொட்டிகளை அகற்றும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


நாடு முழுவதும் தேர்தலுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிப்பு குவிக்கப்படும் விசேட அதிரடிப்படையினர் தேர்தலுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக நாடு முழுவதிலும் 63,000ற்கும் மேற்பட்ட பொலிஸார்  கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அத்துடன், வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காவலரண்களில் 3,250 விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடவுள்ளனர். எந்தவொரு சந்தர்ப்பத்திலாவது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் ஒன்று கூடல்களை நடத்துவது மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நாடு முழுவதிலும் ஒட்டப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பான சுவரொட்டிகளை அகற்றும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement