• Sep 20 2024

உலக தலைவர்களின் ஆதரவை பெறுவது ஒரு வகை கலை- மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பு ! samugammedia

Tamil nila / Jul 30th 2023, 8:45 am
image

Advertisement

உலகத் தலைவர்களின் ஆதரவைப் பெறுவது ஒரு கலை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அம்பலாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், சிறிமாவோ பண்டாரநாயக்கவிற்கு பின்னர் உலகில் உள்ள அனைத்து நாடுகளுடனும் பலமான உறவை பேணிவரும்  ஒரே தலைவர் தாம் மட்டுமே என தெரிவித்தார்.

“ ADB ஆக இருக்கலாம், IMF ஆக இருக்கலாம், உலக வங்கியாக இருக்கலாம், ஜப்பானின் JICA ஆக இருக்கலாம், அவர்கள் அனைவரிடமும், உலகத் தலைவர்களிடமும் ஆதரவையும் பெறுவதும் ஒரு வகை கலையாகும். 

எவருடனும் அச்சமின்றி வாதாடத் தயார் என்பதை நிரூபித்து விட்டேன்.சிறிமாவோ பண்டாரநாயக்காவுக்குப் பிறகு உலகில் உள்ள அனைத்து நாடுகளுடனும் பலமான உறவைப் பேணி அவர்களிடமிருந்து உதவிகளைப் பெற்றவன் நான். ரஷ்யாவு, சீனா அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா, ஜப்பான், ஜெர்மனியுடன் சிறந்த உறவை பேணி நாட்டை கட்டியெழுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டடேன். அந்த ஆதரவைப் பெறுவதில் ஒரு முறையுள்ளது." என்றார்.

உலக தலைவர்களின் ஆதரவை பெறுவது ஒரு வகை கலை- மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பு samugammedia உலகத் தலைவர்களின் ஆதரவைப் பெறுவது ஒரு கலை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.அம்பலாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், சிறிமாவோ பண்டாரநாயக்கவிற்கு பின்னர் உலகில் உள்ள அனைத்து நாடுகளுடனும் பலமான உறவை பேணிவரும்  ஒரே தலைவர் தாம் மட்டுமே என தெரிவித்தார்.“ ADB ஆக இருக்கலாம், IMF ஆக இருக்கலாம், உலக வங்கியாக இருக்கலாம், ஜப்பானின் JICA ஆக இருக்கலாம், அவர்கள் அனைவரிடமும், உலகத் தலைவர்களிடமும் ஆதரவையும் பெறுவதும் ஒரு வகை கலையாகும். எவருடனும் அச்சமின்றி வாதாடத் தயார் என்பதை நிரூபித்து விட்டேன்.சிறிமாவோ பண்டாரநாயக்காவுக்குப் பிறகு உலகில் உள்ள அனைத்து நாடுகளுடனும் பலமான உறவைப் பேணி அவர்களிடமிருந்து உதவிகளைப் பெற்றவன் நான். ரஷ்யாவு, சீனா அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா, ஜப்பான், ஜெர்மனியுடன் சிறந்த உறவை பேணி நாட்டை கட்டியெழுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டடேன். அந்த ஆதரவைப் பெறுவதில் ஒரு முறையுள்ளது." என்றார்.

Advertisement

Advertisement

Advertisement