வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ் மண்ணின் வடமராட்சிப் பதி உறையும் தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்தத் திருவிழாவின் இரத உற்சவம் இன்று ஞாயிற்றுகிழமை காலை இடம்பெற்றது.
இந்நிலையில் வருடாந்த திருவிழாவில் இன்று(18.08.2024) காலை விசேட பூஜைகள் இடம்பெற்று முருகப் பெருமான் தேரேறி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்திருந்தார். முருகப்பெருமானின் ரதோற்சவம் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தனர்.
குறிப்பாக செல்வச் சந்நிதி ஆலய வருடாந்த மஹோற்சவம் கடந்த 04 ஆம் திகதி ஆரம்பித்து நேற்று சப்பறத் திருவிழா இடம்பெற்ற நிலையில், இன்று தேர்த் திருவிழா இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
செல்வச்சந்நிதியான் தேர் உற்சவம்- முருகப்பெருமான் தேரேறி வந்த அருட்காட்சி வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ் மண்ணின் வடமராட்சிப் பதி உறையும் தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்தத் திருவிழாவின் இரத உற்சவம் இன்று ஞாயிற்றுகிழமை காலை இடம்பெற்றது. இந்நிலையில் வருடாந்த திருவிழாவில் இன்று(18.08.2024) காலை விசேட பூஜைகள் இடம்பெற்று முருகப் பெருமான் தேரேறி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்திருந்தார். முருகப்பெருமானின் ரதோற்சவம் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தனர். குறிப்பாக செல்வச் சந்நிதி ஆலய வருடாந்த மஹோற்சவம் கடந்த 04 ஆம் திகதி ஆரம்பித்து நேற்று சப்பறத் திருவிழா இடம்பெற்ற நிலையில், இன்று தேர்த் திருவிழா இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.