மட்டக்களப்பு - கிரானில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ் விபத்துச் சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் கும்புறுமூலைச் சந்தியில் மோட்டார் சைக்கிள் மற்றும் டிப்பர் வாகனம் மோதி இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் மோட்டார் சைக்கிளும் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில், மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியின் கற்கை நெறியை தொடர்ந்து கொண்டிருந்த கிரானைச் சேர்ந்த சுரேந்திரன் கிசாளன் எனும் மாணவனே உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவனின் உயிரிழப்பு கிரானில் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
இவ் விபத்து தொடர்பில் வாழைச்சேனை போக்குவரத்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கிரானில் டிப்பர் - மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து; தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் பரிதாபமாக பலி மட்டக்களப்பு - கிரானில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ் விபத்துச் சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் கும்புறுமூலைச் சந்தியில் மோட்டார் சைக்கிள் மற்றும் டிப்பர் வாகனம் மோதி இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.விபத்தில் மோட்டார் சைக்கிளும் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.குறித்த விபத்தில், மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியின் கற்கை நெறியை தொடர்ந்து கொண்டிருந்த கிரானைச் சேர்ந்த சுரேந்திரன் கிசாளன் எனும் மாணவனே உயிரிழந்துள்ளார். குறித்த மாணவனின் உயிரிழப்பு கிரானில் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.இவ் விபத்து தொடர்பில் வாழைச்சேனை போக்குவரத்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.