• Nov 15 2024

சிவனொளிபாதமலை யாத்திரைக்கு போதைப்பொருட்களுடன் சென்ற எழுவர் கைது - தொடரும் தேடுதல் வேட்டை..!samugammedia

mathuri / Dec 31st 2023, 8:54 pm
image

கடந்த 26ஆம் திகதி சிவனொளிபாதமலை யாத்திரை ஆரம்பமான நிலையில், சிவனொளிபாதமலையான புனித பூமிக்கு போதைப்பொருட்களை கொண்டு செல்வதை தடுப்பதற்காக,  கண்டியில் இருந்து கொண்டு வரப்பட்ட ' ஹோன் ' என்ற மோப்ப நாயின் உதவியுடன் ஹட்டன் பொலிஸார் விசேட தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். 

இதற்கமைய குறித்த நாயின் உதவியுடன் நேற்றைய தினம் (30) நோட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தியகலை  பகுதியில் சிவனொளிபாதமலை நோக்கி செல்லும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்ட போது மதனமோதகம் என்ற போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இது தவிர கடந்த மூன்று நாட்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகள் காரணமாக  கேரள கஞசா, சட்டவிரோத சிகரெட்டுகள், போதை மாத்திரைகள் போன்றவற்றுடன் சிவனொளிபாதமலைக்கு யாத்திரை செல்ல முற்பட்ட 7 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதற்கிடையே குறித்த சோதனை நடவடிக்கையானது சிவனொளிபாதமலை பருவகாலம் முடியும் வரை இடையிடையே மேற்கொள்ளப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.       


சிவனொளிபாதமலை யாத்திரைக்கு போதைப்பொருட்களுடன் சென்ற எழுவர் கைது - தொடரும் தேடுதல் வேட்டை.samugammedia கடந்த 26ஆம் திகதி சிவனொளிபாதமலை யாத்திரை ஆரம்பமான நிலையில், சிவனொளிபாதமலையான புனித பூமிக்கு போதைப்பொருட்களை கொண்டு செல்வதை தடுப்பதற்காக,  கண்டியில் இருந்து கொண்டு வரப்பட்ட ' ஹோன் ' என்ற மோப்ப நாயின் உதவியுடன் ஹட்டன் பொலிஸார் விசேட தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். இதற்கமைய குறித்த நாயின் உதவியுடன் நேற்றைய தினம் (30) நோட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தியகலை  பகுதியில் சிவனொளிபாதமலை நோக்கி செல்லும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்ட போது மதனமோதகம் என்ற போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தவிர கடந்த மூன்று நாட்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகள் காரணமாக  கேரள கஞசா, சட்டவிரோத சிகரெட்டுகள், போதை மாத்திரைகள் போன்றவற்றுடன் சிவனொளிபாதமலைக்கு யாத்திரை செல்ல முற்பட்ட 7 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே குறித்த சோதனை நடவடிக்கையானது சிவனொளிபாதமலை பருவகாலம் முடியும் வரை இடையிடையே மேற்கொள்ளப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.       

Advertisement

Advertisement

Advertisement