• Dec 19 2024

கிண்ணியாவில் பல ஏக்கர் வேளாண்மை நிலங்கள் பாதிப்பு..!

Sharmi / Dec 19th 2024, 2:33 pm
image

அண்மையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக கிண்ணியாவில் பல ஏக்கர் வேளாண்மை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 

இதனால் விவசாயிகள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சோலை வெட்டுவான், மயிலப்பஞ்சேனை, கண்டக்காடு முதலான பகுதிகளில் செய்கை பண்ணப்பட்ட வேளாண்மை  மழை வெள்ளம்  காரணமாக  நீரில் மூழ்கி அழிந்து விட்டதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

இப்பகுதிகளில் சுமார் 200 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் வேளாண்மைச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இங்கு செய்கை பண்ணப்பட்ட வேளாண்மைகளை விட புல் அதிகமாக காணப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

விவசாயத்தை நம்பி வாழும் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதோடு அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்தி இழப்பீடுகளை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.




கிண்ணியாவில் பல ஏக்கர் வேளாண்மை நிலங்கள் பாதிப்பு. அண்மையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக கிண்ணியாவில் பல ஏக்கர் வேளாண்மை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சோலை வெட்டுவான், மயிலப்பஞ்சேனை, கண்டக்காடு முதலான பகுதிகளில் செய்கை பண்ணப்பட்ட வேளாண்மை  மழை வெள்ளம்  காரணமாக  நீரில் மூழ்கி அழிந்து விட்டதாக விவசாயிகள் கூறுகின்றனர்.இப்பகுதிகளில் சுமார் 200 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் வேளாண்மைச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.இங்கு செய்கை பண்ணப்பட்ட வேளாண்மைகளை விட புல் அதிகமாக காணப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.விவசாயத்தை நம்பி வாழும் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதோடு அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்தி இழப்பீடுகளை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement