இந்திய கடற்படையின் 'நட்புறவுப் பாலங்களை' உருவாக்கும் முயற்சியின் தொடர்ச்சியாக, 16 நாடுகளைச் சேர்ந்த பல்தேசியக் குழுவினருடன் ஐஎன்எஸ் சுனைனா எனப்படும் 'ஐஓஎஸ் சாகர்' (IOS Sagar) கப்பல் நாளை (15) கொழும்பை வந்தடையவுள்ளது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனை அறிவித்துள்ளது.
பங்காளதேஷ், இந்தோனேசியா, கென்யா, மலேசியா, மாலைத்தீவு, மொரிஷியஸ், மொசாம்பிக், மியான்மார், சிங்கப்பூர், சீஷெல்ஸ், தென்னாப்பிரிக்கா, இலங்கை, தான்சானியா, தாய்லாந்து, திமோர்-லெஸ்டே மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளின் அதிகாரிகள் இதில் இணைந்துள்ளனர்.
இந்திய கடற்படை பயிற்சி நிறுவனங்களில் கூட்டுத் துறைமுகப் பயிற்சிகளை முடித்த பின்னர், 2026 ஏப்ரல் 02 ஆம் திகதி மும்பையிலிருந்து இப்பயணம் ஆரம்பமானது.
தனது பயிற்சியின் பின்னர் இந்தக் கப்பல் மேற்கொள்ளும் ஏழாவது பயணம் இதுவாகும்.
கடற்படை நடவடிக்கைகள், தகவல் தொடர்பு நடைமுறைகள், கடலில் உயிர் பாதுகாப்பு, தீயணைப்பு, சேதத் தடுப்பு, தேடுதல் மற்றும் கைப்பற்றுதல் நடவடிக்கைகள் (VBSS) மற்றும் மேம்பட்ட கப்பல் கட்டுப்பாட்டுப் பயிற்சிகள் போன்ற பல விசேட பிரிவுகள் இப்பயிற்சியில் உள்வாங்கப்பட்டுள்ளன.
இப்பயணத்தின் போது, இலங்கை கடற்படையின் மேற்கு கடற்படை பிராந்தியத் தளபதி மற்றும் கடற்படைப் பிரிவின் அதிகாரிகளை சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த விஜயமானது கடல்சார் பாதுகாப்பிற்காக கடல்சார் பங்காளிகளுக்கு இடையே ஆழமான உறவையும் ஒத்துழைப்பையும் வளர்க்கும் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் குறிப்பிட்டுள்ளது
பல நாட்டு அதிகாரிகள் நாளை கொழும்பு வரும் 'ஐஓஎஸ் சாகர்' கப்பல் இந்திய கடற்படையின் 'நட்புறவுப் பாலங்களை' உருவாக்கும் முயற்சியின் தொடர்ச்சியாக, 16 நாடுகளைச் சேர்ந்த பல்தேசியக் குழுவினருடன் ஐஎன்எஸ் சுனைனா எனப்படும் 'ஐஓஎஸ் சாகர்' (IOS Sagar) கப்பல் நாளை (15) கொழும்பை வந்தடையவுள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனை அறிவித்துள்ளது. பங்காளதேஷ், இந்தோனேசியா, கென்யா, மலேசியா, மாலைத்தீவு, மொரிஷியஸ், மொசாம்பிக், மியான்மார், சிங்கப்பூர், சீஷெல்ஸ், தென்னாப்பிரிக்கா, இலங்கை, தான்சானியா, தாய்லாந்து, திமோர்-லெஸ்டே மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளின் அதிகாரிகள் இதில் இணைந்துள்ளனர். இந்திய கடற்படை பயிற்சி நிறுவனங்களில் கூட்டுத் துறைமுகப் பயிற்சிகளை முடித்த பின்னர், 2026 ஏப்ரல் 02 ஆம் திகதி மும்பையிலிருந்து இப்பயணம் ஆரம்பமானது. தனது பயிற்சியின் பின்னர் இந்தக் கப்பல் மேற்கொள்ளும் ஏழாவது பயணம் இதுவாகும். கடற்படை நடவடிக்கைகள், தகவல் தொடர்பு நடைமுறைகள், கடலில் உயிர் பாதுகாப்பு, தீயணைப்பு, சேதத் தடுப்பு, தேடுதல் மற்றும் கைப்பற்றுதல் நடவடிக்கைகள் (VBSS) மற்றும் மேம்பட்ட கப்பல் கட்டுப்பாட்டுப் பயிற்சிகள் போன்ற பல விசேட பிரிவுகள் இப்பயிற்சியில் உள்வாங்கப்பட்டுள்ளன. இப்பயணத்தின் போது, இலங்கை கடற்படையின் மேற்கு கடற்படை பிராந்தியத் தளபதி மற்றும் கடற்படைப் பிரிவின் அதிகாரிகளை சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விஜயமானது கடல்சார் பாதுகாப்பிற்காக கடல்சார் பங்காளிகளுக்கு இடையே ஆழமான உறவையும் ஒத்துழைப்பையும் வளர்க்கும் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் குறிப்பிட்டுள்ளது