• Nov 23 2024

ஆளும் கட்சியில் இணையவுள்ள பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள்..! நாடாளுமன்றில் பாரியளவு மாற்றம்! மொட்டு எம்.பி ஆரூடம்

Chithra / Feb 14th 2024, 8:44 am
image

 

எதிர்க்கட்சியைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் ஆளும்கட்சியில் இணைந்து கொள்வார்கள் என இராஜாங்க அமைச்சர் பியால் நிசாந்த தெரிவித்துள்ளார்.

குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களே இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொள்ள உள்ளதாகத் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டபோதே ராஜாங்க அமைச்சர் பியால் நிசாந்த இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

 

இதன்படி நாட்டுக்கும் அரசியலுக்கும் தேவையற்றவர்களை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச போற்றி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

எனினும் அவரது அணியைச் சேர்ந்த பலர் ஆளும் கட்சியில் விரைவில் இணைந்து கொள்வார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஆளும் கட்சிக்கு பலர் ஆதரவு வழங்க உள்ளதாகவும் இதனால் நாடாளுமன்றில் பாரியளவு மாற்றம் ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆளும் கட்சியில் இணையவுள்ள பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள். நாடாளுமன்றில் பாரியளவு மாற்றம் மொட்டு எம்.பி ஆரூடம்  எதிர்க்கட்சியைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் ஆளும்கட்சியில் இணைந்து கொள்வார்கள் என இராஜாங்க அமைச்சர் பியால் நிசாந்த தெரிவித்துள்ளார்.குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களே இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொள்ள உள்ளதாகத் சுட்டிக்காட்டியுள்ளார்.ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டபோதே ராஜாங்க அமைச்சர் பியால் நிசாந்த இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதன்படி நாட்டுக்கும் அரசியலுக்கும் தேவையற்றவர்களை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச போற்றி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.எனினும் அவரது அணியைச் சேர்ந்த பலர் ஆளும் கட்சியில் விரைவில் இணைந்து கொள்வார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும், ஆளும் கட்சிக்கு பலர் ஆதரவு வழங்க உள்ளதாகவும் இதனால் நாடாளுமன்றில் பாரியளவு மாற்றம் ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement