• Mar 10 2026

நாட்டில் இடம்பெற்ற கோர விபத்துக்கள் - இளைஞர் உட்பட மூவர் மரணம்!!

Chithra / Mar 10th 2026, 8:22 am
image

 

கொழும்பு, நவகமுவ - ரணால பகுதியில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 34 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


நேற்று கொழும்பு நோக்கிப் பயணித்த பஸ்ஸுடன் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.


விபத்தின் போது பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி, உடனடியாக அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு நவகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


உயிரிழந்தவர் கேகாலை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி நவகமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


இதேவேளை  பாணந்துறை - மொரட்டுவை புதிய வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில், பாதசாரி ஒருவர் பலத்த காயமடைந்து உயிரிழந்துள்ளார்.


பாணந்துறை, ஜய மாவத்தைக்கு அருகாமையில் நேற்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.


மேற்படி நபர் வீதியைக் கடக்க முயன்ற போது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அவர் மீது மோதியுள்ளது.


இவ்விபத்தில் கொரளவெல்ல பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.


விபத்தில் பலத்த காயமடைந்த அவர், உடனடியாகப் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.


விபத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


இதேவேளை வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடகஹபிட்டிய சந்தியில் இடம்பெற்ற வீதி விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில் ராகம பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


மேற்படி நபர் தனது மோட்டார் சைக்கிளில் குடகஹபிட்டிய சந்தி ஊடாகப் பயணித்துக்கொண்டிருந்த போது, அவருக்குப் பின்னால் வந்த மிக்சர் ரக பாரவூர்தி கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது.


விபத்தில் படுகாயமடைந்த அவர், உடனடியாக அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அவர் வைத்தியசாலைக்குக் கொண்டு வரும் முன்னரே உயிரிழந்துவிட்டார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


பாரவூர்தியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

நாட்டில் இடம்பெற்ற கோர விபத்துக்கள் - இளைஞர் உட்பட மூவர் மரணம்  கொழும்பு, நவகமுவ - ரணால பகுதியில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 34 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று கொழும்பு நோக்கிப் பயணித்த பஸ்ஸுடன் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.விபத்தின் போது பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி, உடனடியாக அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு நவகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.உயிரிழந்தவர் கேகாலை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி நவகமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இதேவேளை  பாணந்துறை - மொரட்டுவை புதிய வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில், பாதசாரி ஒருவர் பலத்த காயமடைந்து உயிரிழந்துள்ளார்.பாணந்துறை, ஜய மாவத்தைக்கு அருகாமையில் நேற்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.மேற்படி நபர் வீதியைக் கடக்க முயன்ற போது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அவர் மீது மோதியுள்ளது.இவ்விபத்தில் கொரளவெல்ல பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.விபத்தில் பலத்த காயமடைந்த அவர், உடனடியாகப் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.விபத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.இதேவேளை வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடகஹபிட்டிய சந்தியில் இடம்பெற்ற வீதி விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில் ராகம பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.மேற்படி நபர் தனது மோட்டார் சைக்கிளில் குடகஹபிட்டிய சந்தி ஊடாகப் பயணித்துக்கொண்டிருந்த போது, அவருக்குப் பின்னால் வந்த மிக்சர் ரக பாரவூர்தி கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது.விபத்தில் படுகாயமடைந்த அவர், உடனடியாக அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அவர் வைத்தியசாலைக்குக் கொண்டு வரும் முன்னரே உயிரிழந்துவிட்டார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.பாரவூர்தியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement