• Mar 10 2026

கடும் மின்னல் அவசர எச்சரிக்கை- மக்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு ஆலோசனை !

Ziya / Feb 7th 2026, 4:35 pm
image

கடும் மின்னல் தாக்கம் தொடர்பான 'செம்மஞ்சள்'   எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கை மையம் இன்று (07) விடுத்துள்ளது. 


வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 


இந்த எச்சரிக்கையானது இன்று இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும்


மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் கடும் மின்னல் தாக்கத்துடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 


மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் ஆலோசனை வழங்கியுள்ளது: 


பாதுகாப்பான கட்டடங்களுக்குள் அல்லது மூடிய அறைகளுக்குள் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். மரங்களின் கீழ் நிற்பதைத் தவிர்க்கவும். 


நெல்வயல்கள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் திறந்த நீர்நிலைகள் போன்ற திறந்த வெளிகளில் இருப்பதைத் தவிர்க்கவும். 


இடி முழக்கத்தின் போது கம்பித் தொடர்புள்ள தொலைபேசிகள் மற்றும் மின்னிணைப்பில் உள்ள மின் உபகரணங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். 


துவிச்சக்கர வண்டிகள், உழவு இயந்திரங்கள் மற்றும் படகுகள் போன்ற திறந்த வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். 


பலத்த காற்றினால் விழக்கூடிய மரங்கள் மற்றும் மின்கம்பிகள் குறித்து அவதானமாக இருக்கவும். 


அவசர உதவிகளுக்கு உங்கள் பிரதேச அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளைத் தொடர்புகொள்ளுமாறு பொதுமக்களுக்கு  வளிமண்டலவியல் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடும் மின்னல் அவசர எச்சரிக்கை- மக்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு ஆலோசனை கடும் மின்னல் தாக்கம் தொடர்பான 'செம்மஞ்சள்'   எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கை மையம் இன்று (07) விடுத்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த எச்சரிக்கையானது இன்று இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும்மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் கடும் மின்னல் தாக்கத்துடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் ஆலோசனை வழங்கியுள்ளது: பாதுகாப்பான கட்டடங்களுக்குள் அல்லது மூடிய அறைகளுக்குள் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். மரங்களின் கீழ் நிற்பதைத் தவிர்க்கவும். நெல்வயல்கள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் திறந்த நீர்நிலைகள் போன்ற திறந்த வெளிகளில் இருப்பதைத் தவிர்க்கவும். இடி முழக்கத்தின் போது கம்பித் தொடர்புள்ள தொலைபேசிகள் மற்றும் மின்னிணைப்பில் உள்ள மின் உபகரணங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். துவிச்சக்கர வண்டிகள், உழவு இயந்திரங்கள் மற்றும் படகுகள் போன்ற திறந்த வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். பலத்த காற்றினால் விழக்கூடிய மரங்கள் மற்றும் மின்கம்பிகள் குறித்து அவதானமாக இருக்கவும். அவசர உதவிகளுக்கு உங்கள் பிரதேச அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளைத் தொடர்புகொள்ளுமாறு பொதுமக்களுக்கு  வளிமண்டலவியல் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement