• Nov 12 2025

எவரெஸ்ட் சிகரத்தில் கடும் பனிப்புயல்; 16,000 அடி உயரத்தில் சிக்கித் தவிக்கும் 1000 பேர்

Chithra / Oct 6th 2025, 12:04 pm
image

உலகின் மிக உயரமான மலைப்பகுதியான எவரெஸ்ட் மலை சிகரத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள திபெத்தில் ஏற்பட்ட கடுமையான பனிப்புயலில் சிக்கிய சுமார் 350 மலையேற்ற வீரர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் சுமார் 1,000 பேர் மலையிலிருந்து இறங்க முடியாமல் பனிப்புயலில் சிக்கியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இங்கு அமைந்துள்ள மலைச்சரிவுகளில் தற்போது கடும் பனிப்புயல் நிலவி வருகிறது.

இந்த மலைச்சரிவுகளில் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான மலையேற்ற வீரர்கள் அப்பகுதியில் தற்காலிக முகாம்கள் அமைத்து மலையேறும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், எவரெஸ்ட் மலை சிகரத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள முகாம்களில் தங்கியிருந்த ஆயிரம் பேர் மலையில் இருந்து இறங்க முடியாமல் பனிப்புயலில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிட்டத்தட்ட கடல் மட்டத்திலிருந்து 4900 மீட்டர் (16000 அடி) உயரத்தில் அமைந்துள்ள இந்த முகாம் பகுதியானது தற்போது அதிக பனியால் மூடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. 

பனிப்புயலில் சிக்கியுள்ள ஆயிரம் பேரையும் மீட்கும் பணியில் சீன மீட்பு ப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

எவரெஸ்ட் சிகரத்தில் கடும் பனிப்புயல்; 16,000 அடி உயரத்தில் சிக்கித் தவிக்கும் 1000 பேர் உலகின் மிக உயரமான மலைப்பகுதியான எவரெஸ்ட் மலை சிகரத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள திபெத்தில் ஏற்பட்ட கடுமையான பனிப்புயலில் சிக்கிய சுமார் 350 மலையேற்ற வீரர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுமார் 1,000 பேர் மலையிலிருந்து இறங்க முடியாமல் பனிப்புயலில் சிக்கியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இங்கு அமைந்துள்ள மலைச்சரிவுகளில் தற்போது கடும் பனிப்புயல் நிலவி வருகிறது.இந்த மலைச்சரிவுகளில் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான மலையேற்ற வீரர்கள் அப்பகுதியில் தற்காலிக முகாம்கள் அமைத்து மலையேறும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், எவரெஸ்ட் மலை சிகரத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள முகாம்களில் தங்கியிருந்த ஆயிரம் பேர் மலையில் இருந்து இறங்க முடியாமல் பனிப்புயலில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கிட்டத்தட்ட கடல் மட்டத்திலிருந்து 4900 மீட்டர் (16000 அடி) உயரத்தில் அமைந்துள்ள இந்த முகாம் பகுதியானது தற்போது அதிக பனியால் மூடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. பனிப்புயலில் சிக்கியுள்ள ஆயிரம் பேரையும் மீட்கும் பணியில் சீன மீட்பு ப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement