சீனாவில் புயல் தாக்குதல்கள் தொடர்ந்துவரும் நிலையில் மழைப்பொழிவு அதிகமாக இருந்துவருகிறது.
சீனா அருகே கடல்பகுதியில் ஏற்பட்டுள்ள மட்மோ புயலால், ஹெய்னாவன் மற்றம் குவாங்டாங் மாகாணங்களில் பலத்த மழை பெய்ததால் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியக்கின்றது.
கடலில் அலைகளின் சீற்றம் கடுமையாக உள்ள நிலையில், கடலோர பகுதிகளில் மக்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
மக்கள் வீதிகளில் பயணிக்க முடியாத அளவிற்கு புயல் காற்று அடித்துவருகின்றது.
நேற்று நள்ளிரவு புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் ஒன்றரை லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ரயில், விமான சேவைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தப்பட்டுள்ளன.
கடந்த வாரம் தென் சீன பகுதியை ரகாசா புயல் சீரழித்த நிலையில் தற்போது மட்மோ என்ற மற்றுமொரு புயலும் தாக்கியுள்ளது.
சீனாவை புரட்டிப்போட்ட மட்மோ புயல்; கொந்தளிக்கும் கடல் கடும் காற்றால் தள்ளாடும் மக்கள் சீனாவில் புயல் தாக்குதல்கள் தொடர்ந்துவரும் நிலையில் மழைப்பொழிவு அதிகமாக இருந்துவருகிறது. சீனா அருகே கடல்பகுதியில் ஏற்பட்டுள்ள மட்மோ புயலால், ஹெய்னாவன் மற்றம் குவாங்டாங் மாகாணங்களில் பலத்த மழை பெய்ததால் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியக்கின்றது. கடலில் அலைகளின் சீற்றம் கடுமையாக உள்ள நிலையில், கடலோர பகுதிகளில் மக்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.மக்கள் வீதிகளில் பயணிக்க முடியாத அளவிற்கு புயல் காற்று அடித்துவருகின்றது. நேற்று நள்ளிரவு புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் ஒன்றரை லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். ரயில், விமான சேவைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தப்பட்டுள்ளன.கடந்த வாரம் தென் சீன பகுதியை ரகாசா புயல் சீரழித்த நிலையில் தற்போது மட்மோ என்ற மற்றுமொரு புயலும் தாக்கியுள்ளது.