• Nov 26 2024

சாந்தன் விரைவில் இலங்கைக்கு...! ஜனாதிபதி உறுதியளித்ததாக சிறிதரன் எம்.பி தெரிவிப்பு...!samugammedia

Sharmi / Feb 3rd 2024, 3:22 pm
image

முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட சாந்தனை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு ஏற்பாடு செய்வதாக ஜனாதிபதி உறுதியளித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர்  சிவஞானம் சிறிதரன்  தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

விடுதலை செய்யப்பட்ட சாந்தன் அவர்கள் தற்போது உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அவரது வருகைக்காக தாயார் பலவருடங்களாக காத்துக்கொண்டிருக்கின்றார். தனது இறுதிக் காலத்தில் மகன் தன்னுடன் இருக்கவேண்டும் என்று விரும்புகின்றார்.

நானும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசனும் இன்றையதினம் ஜனாதிபதியை சந்தித்து,  சாந்தனை  நாட்டிற்கு அழைத்து வருவது குறித்து கலந்துரையாடினோம்.

இந்நிலையில், ஜனாதிபதி அவர்கள் நான் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருவதாக கூறியுள்ளார்.

சாந்தனின் தாயாரிடமிருந்து ஒரு கடிதமும், எங்களையும் ஒரு வேண்டுகோள் கடிதமும் வழங்குமாறு கோரியுள்ளார்.

நாங்கள் நாளையதினம் அந்த கடிதங்களையும், சம்பந்தப்பட்ட ஆவணங்களையும் ஜனாதிபதி அவர்களிடம் வழங்குவோம்.

அவரை விரைவில் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்தும் செயல் வடிவில் செய்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.

சாந்தன் விரைவில் இலங்கைக்கு. ஜனாதிபதி உறுதியளித்ததாக சிறிதரன் எம்.பி தெரிவிப்பு.samugammedia முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட சாந்தனை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு ஏற்பாடு செய்வதாக ஜனாதிபதி உறுதியளித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர்  சிவஞானம் சிறிதரன்  தெரிவித்துள்ளார்.குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,விடுதலை செய்யப்பட்ட சாந்தன் அவர்கள் தற்போது உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது வருகைக்காக தாயார் பலவருடங்களாக காத்துக்கொண்டிருக்கின்றார். தனது இறுதிக் காலத்தில் மகன் தன்னுடன் இருக்கவேண்டும் என்று விரும்புகின்றார்.நானும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசனும் இன்றையதினம் ஜனாதிபதியை சந்தித்து,  சாந்தனை  நாட்டிற்கு அழைத்து வருவது குறித்து கலந்துரையாடினோம்.இந்நிலையில், ஜனாதிபதி அவர்கள் நான் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருவதாக கூறியுள்ளார்.சாந்தனின் தாயாரிடமிருந்து ஒரு கடிதமும், எங்களையும் ஒரு வேண்டுகோள் கடிதமும் வழங்குமாறு கோரியுள்ளார். நாங்கள் நாளையதினம் அந்த கடிதங்களையும், சம்பந்தப்பட்ட ஆவணங்களையும் ஜனாதிபதி அவர்களிடம் வழங்குவோம்.அவரை விரைவில் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்தும் செயல் வடிவில் செய்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement