• Sep 08 2026

சிறையில் வாடும் மகனை சந்திக்க ஓடிய ஷிரந்தி ராஜபக்ச!

Chithra / Sep 7th 2026, 12:39 pm
image

 


விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை பார்ப்பதற்காக அவரது தாயாரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவியுமான ஷிராந்தி ராஜபக்ச இன்று (07) வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுள்ளார்.


நாமல் ராஜபக்ஷவின் நலனை விசாரிப்பதற்காக அவர் சிறைச்சாலைக்கு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.


எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கின் சந்தேகநபராக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்திருந்தனர்.


இதனையடுத்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.


அதற்கமைய, நாமல் ராஜபக்ஷ வெலிக்கடை சிறைச்சாலையில் அதிதீவிர பாதுகாப்பு கொண்ட விசேட அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.


இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவும் வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்திற்குள் சென்றுள்ளார்.


இந்நிலையில், நேற்று முன்தினம் தனது மகன் நாமல் ராஜபக்ஷவை சந்திப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றிருந்தார்.


அதனைத் தொடர்ந்து இன்று நாமலின் தாயாரான ஷிராந்தி ராஜபக்ஷவும் அவரை சந்திப்பதற்காக சிறைச்சாலைக்கு சென்றுள்ளார். 

சிறையில் வாடும் மகனை சந்திக்க ஓடிய ஷிரந்தி ராஜபக்ச  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை பார்ப்பதற்காக அவரது தாயாரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவியுமான ஷிராந்தி ராஜபக்ச இன்று (07) வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுள்ளார்.நாமல் ராஜபக்ஷவின் நலனை விசாரிப்பதற்காக அவர் சிறைச்சாலைக்கு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கின் சந்தேகநபராக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்திருந்தனர்.இதனையடுத்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.அதற்கமைய, நாமல் ராஜபக்ஷ வெலிக்கடை சிறைச்சாலையில் அதிதீவிர பாதுகாப்பு கொண்ட விசேட அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவும் வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்திற்குள் சென்றுள்ளார்.இந்நிலையில், நேற்று முன்தினம் தனது மகன் நாமல் ராஜபக்ஷவை சந்திப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றிருந்தார்.அதனைத் தொடர்ந்து இன்று நாமலின் தாயாரான ஷிராந்தி ராஜபக்ஷவும் அவரை சந்திப்பதற்காக சிறைச்சாலைக்கு சென்றுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement