• Jun 26 2024

நாய்க்குட்டி வளர்த்த சிறுமிக்கு நேர்ந்த சோகம் - திடீர் மரணத்தால் அதிர்ச்சியில் மக்கள்

Chithra / Jun 17th 2024, 8:08 am
image

Advertisement

 

கொழும்பின் புறநகர் பகுதியான கொலன்னாவ மகளிர் உயர்தரப் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் வெறிநாய்க்கடி நோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.

14 வயதுடைய ஹன்சனி ஒல்கா ஜயவீர என்ற மாணவியே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இவர் வீதியில் இருந்து ஒரு நாய்க்குட்டியை வீட்டிற்கு கொண்டு வந்து சுமார் ஒன்றரை மாதங்கள்  வளர்த்துள்ளார். 

இந்நிலையில் நாய் திடீரென உயிரிழந்துள்ளது.

நாய் உயிரிழந்து ஒரு மாதத்திற்குப் பின், ஹன்சனி  வெறி நாய்க்கடி நோய் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. 

அவருக்கு நேர்ந்த நிலைமையால் கொலன்னாவை பிரதேச மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

இந்நிலையில் தங்கள் செல்லப்பிராணி இறந்தால் அல்லது நோய்வாய்ப்பட்டால் அதை உன்னிப்பாகக் அவதானிக்குமாறும் மருத்துவர்கள் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நாய்க்குட்டி வளர்த்த சிறுமிக்கு நேர்ந்த சோகம் - திடீர் மரணத்தால் அதிர்ச்சியில் மக்கள்  கொழும்பின் புறநகர் பகுதியான கொலன்னாவ மகளிர் உயர்தரப் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் வெறிநாய்க்கடி நோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.14 வயதுடைய ஹன்சனி ஒல்கா ஜயவீர என்ற மாணவியே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இவர் வீதியில் இருந்து ஒரு நாய்க்குட்டியை வீட்டிற்கு கொண்டு வந்து சுமார் ஒன்றரை மாதங்கள்  வளர்த்துள்ளார். இந்நிலையில் நாய் திடீரென உயிரிழந்துள்ளது.நாய் உயிரிழந்து ஒரு மாதத்திற்குப் பின், ஹன்சனி  வெறி நாய்க்கடி நோய் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. அவருக்கு நேர்ந்த நிலைமையால் கொலன்னாவை பிரதேச மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.இந்நிலையில் தங்கள் செல்லப்பிராணி இறந்தால் அல்லது நோய்வாய்ப்பட்டால் அதை உன்னிப்பாகக் அவதானிக்குமாறும் மருத்துவர்கள் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement