• Sep 21 2024

காலி முகத்திடலில் வீதியோர உணவு விற்பனை தொடர்பில் அதிர்ச்சித் தகவல் - மாநகர சபை அதிரடி நடவடிக்கை samugammedia

Chithra / Jul 30th 2023, 2:44 pm
image

Advertisement

 காலி முகத்திடலில் வீதியோர உணவு விற்பனையாளர்களை ஒழுங்குபடுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

உணவின் தூய்மை தொடர்பில் பொதுமக்களிடம் இருந்து தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் அனுர அபேரத்ன தெரிவித்தார்.

கொழும்பு மாநகர சபையில் பதிவு செய்யப்பட்ட வர்த்தகர்களுக்கு மாத்திரமே காலிமுகத்திடலை அண்மித்த பகுதிகளில் உணவுகளை விற்பனை செய்ய அனுமதிக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது நான்கு உணவு விற்பனை நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, காலி முகத்திடலை அண்மித்த வர்த்தகர்களுக்கு விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி திங்கட்கிழமை கொழும்பு புதிய நகர மண்டப கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

காலி முகத்திடலில் வீதியோர உணவு விற்பனை தொடர்பில் அதிர்ச்சித் தகவல் - மாநகர சபை அதிரடி நடவடிக்கை samugammedia  காலி முகத்திடலில் வீதியோர உணவு விற்பனையாளர்களை ஒழுங்குபடுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.உணவின் தூய்மை தொடர்பில் பொதுமக்களிடம் இருந்து தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் அனுர அபேரத்ன தெரிவித்தார்.கொழும்பு மாநகர சபையில் பதிவு செய்யப்பட்ட வர்த்தகர்களுக்கு மாத்திரமே காலிமுகத்திடலை அண்மித்த பகுதிகளில் உணவுகளை விற்பனை செய்ய அனுமதிக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது நான்கு உணவு விற்பனை நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.இதேவேளை, காலி முகத்திடலை அண்மித்த வர்த்தகர்களுக்கு விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி திங்கட்கிழமை கொழும்பு புதிய நகர மண்டப கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement