• Nov 22 2024

இலங்கை மாணவர்கள் தொடர்பில் அதிர்ச்சித் தகவல் - சமூக வலைத்தளங்களால் வரும் ஆபத்து

Chithra / Jun 10th 2024, 11:39 am
image


நாட்டில் பாடசாலை மாணவர்களிடையே சமூக வலைத்தளங்களின் பாவனை அதிகரித்துள்ள நிலையில், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக குடும்ப சுகாதாரப் பணியகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் சிறுவர்களுக்கு எதிரான கொடுமைகள் மற்றும் பாலியல் கொடுமைகள் அதிகரிப்பதற்கு பெற்றோரின் பொறுப்பற்ற நடத்தையும் காரணமாகவுள்ளதாகவும் குறித்த பணியகம் தெரிவித்துள்ளது.

எனவே, சமூக வலைத்தளங்களால் தங்களுடைய பிள்ளைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை பெற்றோர்கள் புரிந்துக்கொள்வது மிகவும் அவசியம் என குடும்ப சுகாதாரப் பணியகம் வலியுறுத்தியுள்ளது.

குழந்தைகள் தற்செயலாக ஆபாசமான மற்றும் வன்முறையான சம்பவங்களுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்பதால், 

பெற்றோர்கள் அல்லது பெரியவர்கள் இவ்விடயத்தில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் குடும்ப சுகாதாரப் பணியகம் வலியுறுத்தியுள்ளது

இலங்கை மாணவர்கள் தொடர்பில் அதிர்ச்சித் தகவல் - சமூக வலைத்தளங்களால் வரும் ஆபத்து நாட்டில் பாடசாலை மாணவர்களிடையே சமூக வலைத்தளங்களின் பாவனை அதிகரித்துள்ள நிலையில், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக குடும்ப சுகாதாரப் பணியகம் தெரிவித்துள்ளது.அத்துடன் சிறுவர்களுக்கு எதிரான கொடுமைகள் மற்றும் பாலியல் கொடுமைகள் அதிகரிப்பதற்கு பெற்றோரின் பொறுப்பற்ற நடத்தையும் காரணமாகவுள்ளதாகவும் குறித்த பணியகம் தெரிவித்துள்ளது.எனவே, சமூக வலைத்தளங்களால் தங்களுடைய பிள்ளைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை பெற்றோர்கள் புரிந்துக்கொள்வது மிகவும் அவசியம் என குடும்ப சுகாதாரப் பணியகம் வலியுறுத்தியுள்ளது.குழந்தைகள் தற்செயலாக ஆபாசமான மற்றும் வன்முறையான சம்பவங்களுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்பதால், பெற்றோர்கள் அல்லது பெரியவர்கள் இவ்விடயத்தில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் குடும்ப சுகாதாரப் பணியகம் வலியுறுத்தியுள்ளது

Advertisement

Advertisement

Advertisement