கிழக்கில் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற களுதாவளை சுயம்பு லிங்கப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நடைபெற்று வரும் நிலையில், களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதாரப் பிரிவினரால் விசேட உணவுப் பாதுகாப்பு பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி, மேற்பார்வை சுகாதாரப் பரிசோதகர் மற்றும் பிரதேச பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் அடங்கிய குழுவினர் ஆலய வளாகத்தில் திடீர் சோதனைகளை மேற்கொண்டனர்.
இதன்போது, மாத்தளையிலிருந்து கொண்டு வரப்பட்டு மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற நிலையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பப்பாளி, மாம்பழம், யானைக் கொய்யா மற்றும் வாழைப்பழம் உள்ளிட்ட சுமார் 50 கிலோகிராம் பழுதடைந்த பழங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அவற்றை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் உடனடியாக பறிமுதல் செய்து அழித்ததுடன், உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்குமாறு விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.
ஆலய உற்சவ காலம் முழுவதும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தொடர்ச்சியான பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
களுதாவளை ஆலய உற்சவத்தில் அதிரடி சோதனை: 50 கிலோ பழுதடைந்த பழங்கள் அழிப்பு கிழக்கில் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற களுதாவளை சுயம்பு லிங்கப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நடைபெற்று வரும் நிலையில், களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதாரப் பிரிவினரால் விசேட உணவுப் பாதுகாப்பு பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி, மேற்பார்வை சுகாதாரப் பரிசோதகர் மற்றும் பிரதேச பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் அடங்கிய குழுவினர் ஆலய வளாகத்தில் திடீர் சோதனைகளை மேற்கொண்டனர்.இதன்போது, மாத்தளையிலிருந்து கொண்டு வரப்பட்டு மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற நிலையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பப்பாளி, மாம்பழம், யானைக் கொய்யா மற்றும் வாழைப்பழம் உள்ளிட்ட சுமார் 50 கிலோகிராம் பழுதடைந்த பழங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.அவற்றை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் உடனடியாக பறிமுதல் செய்து அழித்ததுடன், உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்குமாறு விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.ஆலய உற்சவ காலம் முழுவதும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தொடர்ச்சியான பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.