• Feb 05 2025

கனடாவில் பிரபல பாடகரின் வீட்டைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு!

Tharmini / Feb 5th 2025, 5:03 pm
image

கனடாவில், பிரபல இந்திய பாடகர் ஒருவரின் இல்லத்தைக் குறிவைத்து  இனந்தெரியாதவர்களினால் துப்பாக்கிச் கூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பஞ்சாபி பாடகரான  பிரேம் தில்லானின் குடியிருப்பைக் குறி வைத்தே கடந்த திங்கட் கிழமை குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும், ஜெய்பால் புல்லர்  எனும் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் கும்பலொன்று இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்குப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது 2022 ஆம் ஆண்டு பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பாடகர் சித்து மூஸ்வாலாவின் பெயரையும் அந்தக்  வெளியிட்ட ஒரு பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், சிறையில் அடைக்கப்பட்ட ஜக்கு பகவான்பூரியா என்பவர் தொடர்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இசைத்துறையில் பஞ்சாப் பாடகர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

Boot Cut, Old Skool மற்றும் Majha Block உள்ளிட்ட உள்ளிட்ட பாடல்களால் கவனம் ஈர்த்தவர் தில்லான் என்பதும் குறிப்பிடத்தக்கது.


கனடாவில் பிரபல பாடகரின் வீட்டைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு கனடாவில், பிரபல இந்திய பாடகர் ஒருவரின் இல்லத்தைக் குறிவைத்து  இனந்தெரியாதவர்களினால் துப்பாக்கிச் கூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரபல பஞ்சாபி பாடகரான  பிரேம் தில்லானின் குடியிருப்பைக் குறி வைத்தே கடந்த திங்கட் கிழமை குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும், ஜெய்பால் புல்லர்  எனும் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் கும்பலொன்று இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்குப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்போது 2022 ஆம் ஆண்டு பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பாடகர் சித்து மூஸ்வாலாவின் பெயரையும் அந்தக்  வெளியிட்ட ஒரு பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன், சிறையில் அடைக்கப்பட்ட ஜக்கு பகவான்பூரியா என்பவர் தொடர்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இசைத்துறையில் பஞ்சாப் பாடகர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.Boot Cut, Old Skool மற்றும் Majha Block உள்ளிட்ட உள்ளிட்ட பாடல்களால் கவனம் ஈர்த்தவர் தில்லான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement