• Dec 06 2024

யாழில் போதைப் பொருளுடன் பலசரக்கு கடை உரிமையாளர் கைது..!

Sharmi / Oct 12th 2024, 2:21 pm
image

யாழில் போதைப் பொருளுடன்  பலசரக்கு கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

போதைப்பொருளை வைத்திருப்பதாக, யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கீழ் இயங்கும் யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக, யாழ்ப்பாண போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தேடுதல் நடாத்தினார்.

இதன்போது யாழ்ப்பாணம் - இணுவில் வீதி, மானிப்பாய் பகுதியில் பலசரக்கு வியாபார நிலையம் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் போதைபொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். 

இதன்பொழுது, தான் போதை மாத்திரை பாவிப்பதாகவும், தெரிந்த நபர்களுக்கு விற்பனை செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

அவருடைய கடையின் பின் பகுதியில் பல போதை மாத்திரைகளும், வெற்று கவர்களும் இருந்தன. 

இந்நிலையில் பொலிசார் அவரை கைது செய்தனர். 

இந்நிலையில், மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றில் முற்படுத்தபடுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் போதைப் பொருளுடன் பலசரக்கு கடை உரிமையாளர் கைது. யாழில் போதைப் பொருளுடன்  பலசரக்கு கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,போதைப்பொருளை வைத்திருப்பதாக, யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கீழ் இயங்கும் யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக, யாழ்ப்பாண போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தேடுதல் நடாத்தினார்.இதன்போது யாழ்ப்பாணம் - இணுவில் வீதி, மானிப்பாய் பகுதியில் பலசரக்கு வியாபார நிலையம் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் போதைபொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இதன்பொழுது, தான் போதை மாத்திரை பாவிப்பதாகவும், தெரிந்த நபர்களுக்கு விற்பனை செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.அவருடைய கடையின் பின் பகுதியில் பல போதை மாத்திரைகளும், வெற்று கவர்களும் இருந்தன. இந்நிலையில் பொலிசார் அவரை கைது செய்தனர். இந்நிலையில், மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றில் முற்படுத்தபடுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement