• Dec 18 2025

பெண்கள் ஆடை மாற்றும் அறையில் கெமரா வைத்த கடை உரிமையாளர்! கொழும்பில் அதிர்ச்சிச் சம்பவம்

Chithra / Dec 9th 2025, 1:27 pm
image


கொழும்பு - தலவத்துகொட பிரதேசத்தில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் பெண்கள்  ஆடை மாற்றும் அறையில் சிசிரிவி கமராவை பொருத்திய  கடையின் உரிமையாளரை தலங்கம பொலிஸார் கைது செய்துள்ளனர்.   


தலங்கம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான ஆடை விற்பனை நிலையத்தின் உரிமையாளர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார். 

 

கைது செய்யப்பட்ட நபர் 43 வயதான கொட்டாவ, பங்களாவத்தை பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. 


ஆடை விற்பனை நிலையத்தின் உரிமையாளரின் கையடக்கத் தொலைபேசியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அணியறைக்குள் பெண்கள் ஆடை மாற்றும் 201 காணொளிகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். 


சந்தேக நபரின் கையடக்கத் தொலைபேசியில் உள்ள காணொளிகள் பெண்கள், சிறுமிகள் மற்றும் யுவதிகள் உள்ளிட்ட பலர் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


ஆடை விற்பனை நிலையத்தின் உரிமையாளர் குறித்த காணொளிகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்தாரா அல்லது வேறு எவருக்கேனும் விற்பனை செய்தாரா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 


பெண்கள் ஆடை மாற்றும் அறையில் கெமரா வைத்த கடை உரிமையாளர் கொழும்பில் அதிர்ச்சிச் சம்பவம் கொழும்பு - தலவத்துகொட பிரதேசத்தில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் பெண்கள்  ஆடை மாற்றும் அறையில் சிசிரிவி கமராவை பொருத்திய  கடையின் உரிமையாளரை தலங்கம பொலிஸார் கைது செய்துள்ளனர்.   தலங்கம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான ஆடை விற்பனை நிலையத்தின் உரிமையாளர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.  கைது செய்யப்பட்ட நபர் 43 வயதான கொட்டாவ, பங்களாவத்தை பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. ஆடை விற்பனை நிலையத்தின் உரிமையாளரின் கையடக்கத் தொலைபேசியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அணியறைக்குள் பெண்கள் ஆடை மாற்றும் 201 காணொளிகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். சந்தேக நபரின் கையடக்கத் தொலைபேசியில் உள்ள காணொளிகள் பெண்கள், சிறுமிகள் மற்றும் யுவதிகள் உள்ளிட்ட பலர் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.ஆடை விற்பனை நிலையத்தின் உரிமையாளர் குறித்த காணொளிகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்தாரா அல்லது வேறு எவருக்கேனும் விற்பனை செய்தாரா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement