• Mar 15 2026

6 க்கு பதிலாக 4 பாணிப்பூரி கொடுத்த கடைக்காரர்; நடுவீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் - செய்த பெண்ணின் வீடியோ வைரல்!

shanu / Sep 20th 2025, 4:05 pm
image

கடையொன்றில் குறைவாக பாணிப்பூரி வழங்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பெண்ணொருவர் நடு வீதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். 


இந்தச் சம்பவம்  குஜராத் வடோதரா மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, 


குறித்த பகுதியிலுள்ள பாணிப்பூரி கடையொன்றில் பெண்ணொருவர் பாணிப்பூரி வாங்கச் சென்றுள்ளார். 


கடையில் 20 ரூபாவைக் கொடுத்து பாணிப்பூரி கேட்டுள்ளார். அங்கு அவருக்கு 4 பாணிப்பூரிகள் வழங்கப்பட்டன. 


20 ரூபாவுக்கு 6 பாணிப்பூரிக்கள் வழங்கப்படுவதற்குப் பதிலாக 4 பாணிப்பூரிக்கள் அவருக்கு  வழங்கப்பட்டன. 


அதனையடுத்தே ஆவேசமடைந்த பெண் குறித்த பகுதியின் நடுவீதியில் போய் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். 


போராட்டத்தின் போது 6 பாணிப்பூரிக்குப் பதிலாக தனக்கு 4 பாணிப்பூரிக்கள் தான் வழங்கப்பட்டதாகத் தெரிவித்து மனமுடைந்து கண்ணீர்விட்டு அழுதுள்ளார். 


பெண்ணொருவர் நடுவீதயில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவதாக குஜராத் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது. தகவலையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் பெண்ணிடம் கலந்துரையாடி  நிலைமையைக் கையாண்டனர். 


6 பாணிப்பூரிக்குப் பதிலாக 4 பாணிப்பூரிக்கள் வழங்கப்பட்டதற்காக குறித்த பெண் நடுவீதியில் அமர்ந்து அழுது போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் காணொளியாக வெளிவந்துள்ளது. 


அந்தக் காணொளியைப் பார்த்த பலரும் பெண்ணின் செயலைக் கேளிக்கையாக எண்ணி பல கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

6 க்கு பதிலாக 4 பாணிப்பூரி கொடுத்த கடைக்காரர்; நடுவீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் - செய்த பெண்ணின் வீடியோ வைரல் கடையொன்றில் குறைவாக பாணிப்பூரி வழங்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பெண்ணொருவர் நடு வீதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்தச் சம்பவம்  குஜராத் வடோதரா மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, குறித்த பகுதியிலுள்ள பாணிப்பூரி கடையொன்றில் பெண்ணொருவர் பாணிப்பூரி வாங்கச் சென்றுள்ளார். கடையில் 20 ரூபாவைக் கொடுத்து பாணிப்பூரி கேட்டுள்ளார். அங்கு அவருக்கு 4 பாணிப்பூரிகள் வழங்கப்பட்டன. 20 ரூபாவுக்கு 6 பாணிப்பூரிக்கள் வழங்கப்படுவதற்குப் பதிலாக 4 பாணிப்பூரிக்கள் அவருக்கு  வழங்கப்பட்டன. அதனையடுத்தே ஆவேசமடைந்த பெண் குறித்த பகுதியின் நடுவீதியில் போய் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். போராட்டத்தின் போது 6 பாணிப்பூரிக்குப் பதிலாக தனக்கு 4 பாணிப்பூரிக்கள் தான் வழங்கப்பட்டதாகத் தெரிவித்து மனமுடைந்து கண்ணீர்விட்டு அழுதுள்ளார். பெண்ணொருவர் நடுவீதயில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவதாக குஜராத் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது. தகவலையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் பெண்ணிடம் கலந்துரையாடி  நிலைமையைக் கையாண்டனர். 6 பாணிப்பூரிக்குப் பதிலாக 4 பாணிப்பூரிக்கள் வழங்கப்பட்டதற்காக குறித்த பெண் நடுவீதியில் அமர்ந்து அழுது போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் காணொளியாக வெளிவந்துள்ளது. அந்தக் காணொளியைப் பார்த்த பலரும் பெண்ணின் செயலைக் கேளிக்கையாக எண்ணி பல கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement