அரச சேவையின் கொடுப்பனவுகள் தொடர்பில் சிக்கல்கள் நிலவுவதால், அது குறித்து மீளாய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு குறுகிய கால அவகாசம் வழங்குமாறும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரச ஊழியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
2027 ஆம் ஆண்டில் மூன்றாவது சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளதால், அதன் பின்னர் அரச சேவையின் ஏனைய கொடுப்பனவுகளையும் வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
முழு நாடுமே ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நுவரெலியாவில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெளிவுபடுத்தினார்.
அங்கு மேலும் தெரிவித்தாவது,
அரச ஊழியர்களுக்கு திருப்திகரமான வாழ்க்கையை பெற்றுக்கொடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறது.
அதேவேளை, டித்வா அனர்த்தம் தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, அந்த அனர்த்தத்தினால் நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீள்வதற்காக திறைசேரியிலிருந்து 50,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதற்காக எவ்வித பணமும் கடனாகப் பெறப்படவில்லை எனவும், எவ்வித பணமும் அச்சிடப்படவில்லை
அச்சந்தர்ப்பத்தில் திறைசேரியின் கணக்கில் 120,000 கோடி ரூபாய் இருந்ததாகவும், எனவே இந்த 50,000 கோடி ரூபாவை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்ட்டுள்ளது.
டித்வா அனர்த்தத்தினால் நாட்டுக்கு ஏற்பட்ட சேதம் சுமார் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என உலக வங்கி கணிப்பிட்டுள்ளது.
அது நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் சுமார் 4% எனவும், அரசாங்கம் முன்னெடுத்த வலுவான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்படவிருந்த பாரிய பாதிப்பிலிருந்து மீள முடிந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அரச சேவையின் கொடுப்பனவுகள் பிரச்சினையை தீர்க்க குறுகிய கால அவகாசம் தேவை; அநுர அரச சேவையின் கொடுப்பனவுகள் தொடர்பில் சிக்கல்கள் நிலவுவதால், அது குறித்து மீளாய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு குறுகிய கால அவகாசம் வழங்குமாறும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரச ஊழியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 2027 ஆம் ஆண்டில் மூன்றாவது சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளதால், அதன் பின்னர் அரச சேவையின் ஏனைய கொடுப்பனவுகளையும் வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார். முழு நாடுமே ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நுவரெலியாவில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெளிவுபடுத்தினார். அங்கு மேலும் தெரிவித்தாவது,அரச ஊழியர்களுக்கு திருப்திகரமான வாழ்க்கையை பெற்றுக்கொடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறது. அதேவேளை, டித்வா அனர்த்தம் தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, அந்த அனர்த்தத்தினால் நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீள்வதற்காக திறைசேரியிலிருந்து 50,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்காக எவ்வித பணமும் கடனாகப் பெறப்படவில்லை எனவும், எவ்வித பணமும் அச்சிடப்படவில்லைஅச்சந்தர்ப்பத்தில் திறைசேரியின் கணக்கில் 120,000 கோடி ரூபாய் இருந்ததாகவும், எனவே இந்த 50,000 கோடி ரூபாவை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்ட்டுள்ளது.டித்வா அனர்த்தத்தினால் நாட்டுக்கு ஏற்பட்ட சேதம் சுமார் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என உலக வங்கி கணிப்பிட்டுள்ளது.அது நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் சுமார் 4% எனவும், அரசாங்கம் முன்னெடுத்த வலுவான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்படவிருந்த பாரிய பாதிப்பிலிருந்து மீள முடிந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.