தேசிய சந்தையில் ஒரு சில அத்தியாவசிய மருந்துப் பொருட்களின்மையின் காரணமாகவே மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
எனவே, தட்டுப்பாடு நிலவும் மருந்து வகைகளை இறக்குமதி செய்ய கால அவகாசம் தேவைப்படுமென்றும் இறக்குமதி நடவடிக்கைகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
மருந்து விவகாரத்தில் நிதி தட்டுப்பாட்டுக்கப்பால் மருந்து இறக்குமதி செய்யும் முறையில் பிரச்சினை தோற்றம் பெற்றுள்ளது. அந்த முறையையே மாற்றியமைக்க வேண்டும்.
அவ்வாறான முறையொன்று நடைமுறையில் இருக்கும் நிலையில், மருந்து கொள்வனவு நடவடிக்கைகளுக்கு விரும்பினால் எவராலும் ஒத்துழைப்பு வழங்க முடியும். அதில் எந்தச் சிக்கலும் இல்லை.
தேசிய சந்தையில் தேவையான மருந்துகள் இருந்தால் அரசாங்கம் தலையிட்டு மருந்துகளை கொள்வனவுசெய்ய நடவடிக்கை எடுக்கும்.
ஒருசில மருந்துகள் தேசிய சந்தையில் இல்லாமையே தற்போதைய மருந்துத் தட்டுப்பாட்டுப் பிரச்சினைக்கான காரணமாகும்.
எனவே, அந்த மருந்துகளை வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்ய வேண்டும். இறக்குமதி செய்ய கால அவகாசம் தேவைப்படும். அதுவே தற்போதுள்ள பிரச்சினையாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.
தேசிய சந்தையில் அத்தியாவசிய மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு தேசிய சந்தையில் ஒரு சில அத்தியாவசிய மருந்துப் பொருட்களின்மையின் காரணமாகவே மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.எனவே, தட்டுப்பாடு நிலவும் மருந்து வகைகளை இறக்குமதி செய்ய கால அவகாசம் தேவைப்படுமென்றும் இறக்குமதி நடவடிக்கைகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,மருந்து விவகாரத்தில் நிதி தட்டுப்பாட்டுக்கப்பால் மருந்து இறக்குமதி செய்யும் முறையில் பிரச்சினை தோற்றம் பெற்றுள்ளது. அந்த முறையையே மாற்றியமைக்க வேண்டும். அவ்வாறான முறையொன்று நடைமுறையில் இருக்கும் நிலையில், மருந்து கொள்வனவு நடவடிக்கைகளுக்கு விரும்பினால் எவராலும் ஒத்துழைப்பு வழங்க முடியும். அதில் எந்தச் சிக்கலும் இல்லை.தேசிய சந்தையில் தேவையான மருந்துகள் இருந்தால் அரசாங்கம் தலையிட்டு மருந்துகளை கொள்வனவுசெய்ய நடவடிக்கை எடுக்கும். ஒருசில மருந்துகள் தேசிய சந்தையில் இல்லாமையே தற்போதைய மருந்துத் தட்டுப்பாட்டுப் பிரச்சினைக்கான காரணமாகும்.எனவே, அந்த மருந்துகளை வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்ய வேண்டும். இறக்குமதி செய்ய கால அவகாசம் தேவைப்படும். அதுவே தற்போதுள்ள பிரச்சினையாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.