சந்தையில் ஏற்பட்டுள்ள சிவப்பு அரிசி தட்டுப்பாடு குறித்து வர்த்தக, வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும்
கூட்டுறவு அமைச்சர் வசந்த சமரசிங்க விளக்கமளித்துள்ளார்.
முந்தை அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக இந்த முறை சிவப்பு அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக
அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
பெங்கல் சமைக்க சிவப்பு அரிசி தேவை என்பதை நாங்கள் அறிவோம். எனவே, இன்று சமூகத்தில் சிவப்பு அரிசி பற்றாக்குறை இருப்பதாகப் பேசப்படுகிறது.சந்தையில் அரிசி பற்றாக்குறை இருப்பதாக மக்கள் எமக்கு சொல்கின்றனர்.
சிவப்பு அரிசிக்கான தட்டப்பாடு குறித்து நான் விளக்க விரும்புகிறேன்.குறிப்பாக மாத்தறை, காலி, ஹம்பாந்தோட்டை, தென் மாகாணங்களுடன் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் இந்த நெல் பயிரிடப்படுகிறது.
இந்த நெல் பயிரிடப்படும் பகுதிகளில் உள்ள ஆலைகள் மற்றும் களஞ்சியசாலைகள் குறித்து நாங்கள் ஒரு கணக்கெடுப்பை நடத்தினோம்.
அதன்படி, கடந்த 2024 ஆம் ஆண்டில் நம் நாட்டில் 277,315 ஹெக்டேர் சிவப்பு அரிசி பயிரிடப்பட்டுள்ளது.
2024 சிறுபோக மற்றும் பெரும்போக இரண்டு பருவங்களும் அதேபோன்று பயிரிடப்பட்டுள்ளன. அதன்படி, 1.1 மில்லியன் மெட்ரிக் தொன் நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளது.பெரும்போக அறுவடை இப்போது தொடங்கியுள்ளது.
2024 பெரும்போகத்தில் 277,000 ஹெக்டேர் பயிரிடப்பட்டுள்ளதுடன், அதே நேரத்தில் சிறுபோகப் பருவத்தில், 100,000 ஹெக்டேர் மட்டுமே பயிரிடப்பட்டது.
சிறுபோகப் பருவத்தில் நெல் அறுவடை சுமார் 403,970 தொன்களாகவும், பெரும்போகப் பருவத்தில் 706,000 தொன்களாகவும் இருந்தது.இப்போது நாம் 2025 பெரும்போகத்திற்கு தயாராகி வருகிறோம்.
2025 பெரும்போகத்தில் ஒரு லட்சத்து அறுபத்தோராயிரத்து அறுபத்தேழு ஹெக்டேர் சிவப்பு அரிசி நெல் பயிரிடப்பட்டுள்ளது.
எதிர்பார்க்கப்படும் நெல் அறுவடை ஆறு லட்சத்து நாற்பத்தெட்டாயிரத்து இருநூறு மெட்ரிக்தொன்களாகும்.
அதன்படி, 2025 ஆம் ஆண்டில் சிவப்பு அரிசி பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை.
2024 ஆம் ஆண்டில் முந்தைய அரசாங்கம் செய்த சில முட்டாள்தனமான செயல்களால் தான் தைப்பொங்கல் அன்று பொங்கல் கூட சமைக்க முடியவில்லை என்றார்
சிவப்பு அரிசி தட்டுப்பாடு - காரணத்தை வௌிப்படுத்திய அரசாங்கம் சந்தையில் ஏற்பட்டுள்ள சிவப்பு அரிசி தட்டுப்பாடு குறித்து வர்த்தக, வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைச்சர் வசந்த சமரசிங்க விளக்கமளித்துள்ளார்.முந்தை அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக இந்த முறை சிவப்பு அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.பெங்கல் சமைக்க சிவப்பு அரிசி தேவை என்பதை நாங்கள் அறிவோம். எனவே, இன்று சமூகத்தில் சிவப்பு அரிசி பற்றாக்குறை இருப்பதாகப் பேசப்படுகிறது.சந்தையில் அரிசி பற்றாக்குறை இருப்பதாக மக்கள் எமக்கு சொல்கின்றனர்.சிவப்பு அரிசிக்கான தட்டப்பாடு குறித்து நான் விளக்க விரும்புகிறேன்.குறிப்பாக மாத்தறை, காலி, ஹம்பாந்தோட்டை, தென் மாகாணங்களுடன் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் இந்த நெல் பயிரிடப்படுகிறது.இந்த நெல் பயிரிடப்படும் பகுதிகளில் உள்ள ஆலைகள் மற்றும் களஞ்சியசாலைகள் குறித்து நாங்கள் ஒரு கணக்கெடுப்பை நடத்தினோம்.அதன்படி, கடந்த 2024 ஆம் ஆண்டில் நம் நாட்டில் 277,315 ஹெக்டேர் சிவப்பு அரிசி பயிரிடப்பட்டுள்ளது.2024 சிறுபோக மற்றும் பெரும்போக இரண்டு பருவங்களும் அதேபோன்று பயிரிடப்பட்டுள்ளன. அதன்படி, 1.1 மில்லியன் மெட்ரிக் தொன் நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளது.பெரும்போக அறுவடை இப்போது தொடங்கியுள்ளது.2024 பெரும்போகத்தில் 277,000 ஹெக்டேர் பயிரிடப்பட்டுள்ளதுடன், அதே நேரத்தில் சிறுபோகப் பருவத்தில், 100,000 ஹெக்டேர் மட்டுமே பயிரிடப்பட்டது.சிறுபோகப் பருவத்தில் நெல் அறுவடை சுமார் 403,970 தொன்களாகவும், பெரும்போகப் பருவத்தில் 706,000 தொன்களாகவும் இருந்தது.இப்போது நாம் 2025 பெரும்போகத்திற்கு தயாராகி வருகிறோம்.2025 பெரும்போகத்தில் ஒரு லட்சத்து அறுபத்தோராயிரத்து அறுபத்தேழு ஹெக்டேர் சிவப்பு அரிசி நெல் பயிரிடப்பட்டுள்ளது.எதிர்பார்க்கப்படும் நெல் அறுவடை ஆறு லட்சத்து நாற்பத்தெட்டாயிரத்து இருநூறு மெட்ரிக்தொன்களாகும்.அதன்படி, 2025 ஆம் ஆண்டில் சிவப்பு அரிசி பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை.2024 ஆம் ஆண்டில் முந்தைய அரசாங்கம் செய்த சில முட்டாள்தனமான செயல்களால் தான் தைப்பொங்கல் அன்று பொங்கல் கூட சமைக்க முடியவில்லை என்றார்