• Oct 13 2026

மீண்டும் சிறைக்கு சென்ற ஷிரந்தி! உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கூறியது என்ன?

Chithra / Oct 9th 2026, 1:38 pm
image


விசாரணைக் கைதியாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஷிரந்தி ராஜபக்ஷ, இன்று காலை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் கவனம் பெற்றுள்ளது.


கண் தொடர்பான பாதிப்பு காரணமாக அவருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இதற்கிடையில், நேற்று சிறைச்சாலை மருத்துவ நிபுணர் ஒருவரால் அவர் பரிசோதிக்கப்பட்டுள்ளார்.


அந்தப் பரிசோதனையின் பின்னர், தேசிய கண் மருத்துவமனையின் நிபுணர் ஒருவரிடம் மேலதிக பரிசோதனை மேற்கொள்ளப் பரிந்துரைக்கப்பட்டது.


இதற்கமைய, இன்று காலை கொழும்பு தேசிய கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஷிரந்தி ராஜபக்ஷ, சிறப்பு மருத்துவப் பரிசோதனையை நிறைவு செய்த பின்னர் மீண்டும் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

மீண்டும் சிறைக்கு சென்ற ஷிரந்தி உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கூறியது என்ன விசாரணைக் கைதியாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஷிரந்தி ராஜபக்ஷ, இன்று காலை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் கவனம் பெற்றுள்ளது.கண் தொடர்பான பாதிப்பு காரணமாக அவருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதற்கிடையில், நேற்று சிறைச்சாலை மருத்துவ நிபுணர் ஒருவரால் அவர் பரிசோதிக்கப்பட்டுள்ளார்.அந்தப் பரிசோதனையின் பின்னர், தேசிய கண் மருத்துவமனையின் நிபுணர் ஒருவரிடம் மேலதிக பரிசோதனை மேற்கொள்ளப் பரிந்துரைக்கப்பட்டது.இதற்கமைய, இன்று காலை கொழும்பு தேசிய கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஷிரந்தி ராஜபக்ஷ, சிறப்பு மருத்துவப் பரிசோதனையை நிறைவு செய்த பின்னர் மீண்டும் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement