வாகரையில் இறால் வளர்ப்பு திட்டம் தொடர்பாக பயனாளிகளைத் தெரிவு செய்யும் நேர்முகப் தேர்வினை நிறுத்துமாறு கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வாகரை பிரதேச மீனவர் அமைப்புக்கள், கிராம அபிவிருத்தி சங்கங்கள்,விளையாட்டு கழகங்கள்,ஆலய அமைப்புக்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து போராட்டம் ஒன்றினை இன்றைய தினம் இந்த போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
இன்று காலை 9 மணியளவில் உதவி மாவட்ட செயலாளர் தலைமையில் குறித்த நேர்முகத் தேர்வு நடைபெற்ற நிலையில் அவ்விடத்திற்கு சென்ற எதிர்ப்பாளர்கள் மக்களுக்கு பொருத்தமற்ற, மக்கள் விரும்பாத இவ் நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டாம் என தெரிவித்தனர்.
அத்துடன் உதவி மாவட்ட செயலாளர் குறித்த விடயம் தொடர்பாக தனது மேலதிகாரியான அரச அதிபரின் கவனத்திற்கு தெரியப்படுத்தியிருந்தார்.
மாவட்ட அரச அதிபர் இதனை நிறுத்தாமல் நேர்முகப் தேர்வினை நடாத்துமாறு பணிப்புரை விடுத்திருந்தார். இதனை தொடர்ந்து பயணாளிகள் தெரிவு தொடர்பான நேர்முகத் தேர்வு நடவடிக்கை இடம்பெற்றது.
இதேவேளை கிழக்கு மாகாண ஆளுநரின் பணிப்புரைக்கு அமைய அரச அதிபருக்கு வழங்கப்பட்ட தகவலின் படி இன்று இவ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டப்பட்டதாக உதவி மாவட்ட செயலாளர் தெரிவித்திருந்தார்.
இவ் நடவடிக்கையினை ஏற்றுக்கொள்ளாத போராட்டக்காரர்கள் தமது நியாயமான கோரிக்கையை முன் வைத்து கண்டித்து இவ் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொண்டனர்.
அவிபிருத்தி என்ற போர்வையில் வளங்களை அழிக்காதே, வாகரை மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்காதே. ஆளுநரே மக்களின் நியாயமான கோரிக்கைக்கு மதிப்பளி, அழிவுகரமான இறால் வளர்ப்பை நிறுத்து. சூழலை அழிக்கும் இறால் வளர்ப்பு திட்டம் எங்களுக்கு வேண்டாம். என்பன போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். இதன் போது கிழக்கு மாகாண அளுநர் மற்றும் மாவட்டத்தினை பிரதிநிதித்துவப் படுத்தும் இராஜாங்க அமைச்சர்கள் கவனத்தில் கொண்டு தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தனர்.
அத்துடன் வாகரை பிரதேசத்தில் சுமார் 1500 ற்கும் மேற்பட்ட களப்பு காணிப் பரப்பில் இறால் வளர்ப்பு திட்டத்தை மேற்கொள்வதற்கு கடந்த பல வருடங்களாக பல்வேறு முயற்சிகள் இடம்பெற்று வருகிறது.
பிரதேச மக்கள் விரும்பாத குறித்த திட்டத்தை நிறுத்துமாறு கோரி பல முறை கவனயீர்ப்பு போராட்டத்தை தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்த போதிலும் சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் மாவட்டத்தினை பிரதிநிதிதிதுவப் படுத்தும் இராஜாங்க அமைச்சர்கள் கவனத்தில் கொள்வதாகவில்லை என கவலை வெளியிட்டனர்.
வாகரையில் இறால் வளர்ப்பு திட்டம் -நேர்முகத் தேர்விற்கு எதிர்ப்பு வாகரையில் இறால் வளர்ப்பு திட்டம் தொடர்பாக பயனாளிகளைத் தெரிவு செய்யும் நேர்முகப் தேர்வினை நிறுத்துமாறு கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.வாகரை பிரதேச மீனவர் அமைப்புக்கள், கிராம அபிவிருத்தி சங்கங்கள்,விளையாட்டு கழகங்கள்,ஆலய அமைப்புக்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து போராட்டம் ஒன்றினை இன்றைய தினம் இந்த போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,இன்று காலை 9 மணியளவில் உதவி மாவட்ட செயலாளர் தலைமையில் குறித்த நேர்முகத் தேர்வு நடைபெற்ற நிலையில் அவ்விடத்திற்கு சென்ற எதிர்ப்பாளர்கள் மக்களுக்கு பொருத்தமற்ற, மக்கள் விரும்பாத இவ் நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டாம் என தெரிவித்தனர்.அத்துடன் உதவி மாவட்ட செயலாளர் குறித்த விடயம் தொடர்பாக தனது மேலதிகாரியான அரச அதிபரின் கவனத்திற்கு தெரியப்படுத்தியிருந்தார்.மாவட்ட அரச அதிபர் இதனை நிறுத்தாமல் நேர்முகப் தேர்வினை நடாத்துமாறு பணிப்புரை விடுத்திருந்தார். இதனை தொடர்ந்து பயணாளிகள் தெரிவு தொடர்பான நேர்முகத் தேர்வு நடவடிக்கை இடம்பெற்றது.இதேவேளை கிழக்கு மாகாண ஆளுநரின் பணிப்புரைக்கு அமைய அரச அதிபருக்கு வழங்கப்பட்ட தகவலின் படி இன்று இவ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டப்பட்டதாக உதவி மாவட்ட செயலாளர் தெரிவித்திருந்தார்.இவ் நடவடிக்கையினை ஏற்றுக்கொள்ளாத போராட்டக்காரர்கள் தமது நியாயமான கோரிக்கையை முன் வைத்து கண்டித்து இவ் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொண்டனர்.அவிபிருத்தி என்ற போர்வையில் வளங்களை அழிக்காதே, வாகரை மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்காதே. ஆளுநரே மக்களின் நியாயமான கோரிக்கைக்கு மதிப்பளி, அழிவுகரமான இறால் வளர்ப்பை நிறுத்து. சூழலை அழிக்கும் இறால் வளர்ப்பு திட்டம் எங்களுக்கு வேண்டாம். என்பன போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். இதன் போது கிழக்கு மாகாண அளுநர் மற்றும் மாவட்டத்தினை பிரதிநிதித்துவப் படுத்தும் இராஜாங்க அமைச்சர்கள் கவனத்தில் கொண்டு தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தனர்.அத்துடன் வாகரை பிரதேசத்தில் சுமார் 1500 ற்கும் மேற்பட்ட களப்பு காணிப் பரப்பில் இறால் வளர்ப்பு திட்டத்தை மேற்கொள்வதற்கு கடந்த பல வருடங்களாக பல்வேறு முயற்சிகள் இடம்பெற்று வருகிறது.பிரதேச மக்கள் விரும்பாத குறித்த திட்டத்தை நிறுத்துமாறு கோரி பல முறை கவனயீர்ப்பு போராட்டத்தை தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்த போதிலும் சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் மாவட்டத்தினை பிரதிநிதிதிதுவப் படுத்தும் இராஜாங்க அமைச்சர்கள் கவனத்தில் கொள்வதாகவில்லை என கவலை வெளியிட்டனர்.