• Feb 12 2025

சர்வதேச அளவில் சீகிரியாவுக்கு கிடைத்த அங்கீகாரம்!

Chithra / Feb 10th 2025, 1:14 pm
image


Booking.com  என்ற வலைத்தளம், 2025 ஆம் ஆண்டிற்கான உலகின் மிகவும் வரவேற்கத்தக்க நகரமாக இலங்கையின்  சீகிரியாவை தரப்படுத்தியுள்ளது.

குறித்த வலைத்தளமானது 360 மில்லியனுக்கும் அதிகமான சரிபார்க்கப்பட்ட வாடிக்கையாளர் மதிப்புரைகளை அடிப்படையாகக் கொண்டு, 

2025 ஆம் ஆண்டிற்கான உலகின் மிகவும் வரவேற்கத்தக்க நகரமாக இலங்கையின் சிகிரியாவை முடிசூட்டியுள்ளது.

பதின்மூன்றாவது டிராவலர் ரிவியூ விருதுகளின் (Traveller Review Awards) ஒரு பகுதியாக, Booking.com உலகில் மிகவும் வரவேற்கத்தக்க 10 நகரங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, சிகிரியா பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 

Booking.com, இலங்கையின் சிகிரியா பற்றி கூறுகையில் 

"இலங்கையின் 'கலாசார முக்கோணத்தின்' மையத்தில் அமைந்துள்ள சிகிரியா, இயற்கை அழகையும் ஆழமான வரலாற்றையும் கொண்டுள்ள ஒரு இடமாகும்.

யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமான சிகிரியா பண்டைய இலங்கையின் கட்டடக்கலை சிறப்பை எடுத்துக்காட்டுகிறது.

மேலும், சிகிரியா சாகசம் மற்றும் அமைதியின் மறக்க முடியாத கலவையை வழங்குகிறது" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் சீகிரியாவுக்கு கிடைத்த அங்கீகாரம் Booking.com  என்ற வலைத்தளம், 2025 ஆம் ஆண்டிற்கான உலகின் மிகவும் வரவேற்கத்தக்க நகரமாக இலங்கையின்  சீகிரியாவை தரப்படுத்தியுள்ளது.குறித்த வலைத்தளமானது 360 மில்லியனுக்கும் அதிகமான சரிபார்க்கப்பட்ட வாடிக்கையாளர் மதிப்புரைகளை அடிப்படையாகக் கொண்டு, 2025 ஆம் ஆண்டிற்கான உலகின் மிகவும் வரவேற்கத்தக்க நகரமாக இலங்கையின் சிகிரியாவை முடிசூட்டியுள்ளது.பதின்மூன்றாவது டிராவலர் ரிவியூ விருதுகளின் (Traveller Review Awards) ஒரு பகுதியாக, Booking.com உலகில் மிகவும் வரவேற்கத்தக்க 10 நகரங்களை வெளியிட்டுள்ளது.அதன்படி, சிகிரியா பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. Booking.com, இலங்கையின் சிகிரியா பற்றி கூறுகையில் "இலங்கையின் 'கலாசார முக்கோணத்தின்' மையத்தில் அமைந்துள்ள சிகிரியா, இயற்கை அழகையும் ஆழமான வரலாற்றையும் கொண்டுள்ள ஒரு இடமாகும்.யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமான சிகிரியா பண்டைய இலங்கையின் கட்டடக்கலை சிறப்பை எடுத்துக்காட்டுகிறது.மேலும், சிகிரியா சாகசம் மற்றும் அமைதியின் மறக்க முடியாத கலவையை வழங்குகிறது" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement