• Feb 11 2025

நண்பர்களுடன் கடலில் நீராடச் சென்ற மாணவன் சடலமாக மீட்பு

Chithra / Feb 10th 2025, 1:03 pm
image

 

மட்டக்களப்பு, காத்தான்குடி நதியா கடற்கரை பகுதியில் கடலலையில் அள்ளுண்டு செல்லப்பட்டு காணாமல் போயிருந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன்  சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மாணவன் தனது நண்பர்கள் ஐவருடன் கடற்கரை பகுதியில் நீராடிக்கொண்டிருந்த போது நேற்று முன்தினம் சனிக்கிழமை கடல் அலையில்  அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்த நிலையில் பிரதேச மக்களால் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் குறித்த மாணவன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) பூனொச்சிமுனை கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் புதிய காத்தான்குடி நூராணியா வித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்வி பயிலும் சாமில் சனாஹி என்ற மாணவன் என  அடையாளம் காணப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

நண்பர்களுடன் கடலில் நீராடச் சென்ற மாணவன் சடலமாக மீட்பு  மட்டக்களப்பு, காத்தான்குடி நதியா கடற்கரை பகுதியில் கடலலையில் அள்ளுண்டு செல்லப்பட்டு காணாமல் போயிருந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன்  சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த மாணவன் தனது நண்பர்கள் ஐவருடன் கடற்கரை பகுதியில் நீராடிக்கொண்டிருந்த போது நேற்று முன்தினம் சனிக்கிழமை கடல் அலையில்  அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்த நிலையில் பிரதேச மக்களால் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.இந்நிலையில் குறித்த மாணவன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) பூனொச்சிமுனை கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சடலமாக மீட்கப்பட்டவர் புதிய காத்தான்குடி நூராணியா வித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்வி பயிலும் சாமில் சனாஹி என்ற மாணவன் என  அடையாளம் காணப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement