பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் கையெழுத்து போராட்டம் இன்று(26) முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் குறித்த கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க கோரியும், கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்தை நிறுத்தக் கோரியும், இந்த கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அதற்கமைய தென்மராட்சிப் பிரதேசத்தின் கொடிகாமம் மற்றும் சாவகச்சேரி பகுதிகளில் கையெழுத்துக்கள் பெறப்பட்டன.
கையெழுத்துப் போராட்டத்தில் சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர் ஞானப்பிரகாசம் கிசோர், சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர்கள் செ.மயூரன், கு.தினேஸ் ஆகியோரும் இணைந்திருந்தனர்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக்கோரி கையெழுத்துப் போராட்டம் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் கையெழுத்து போராட்டம் இன்று(26) முன்னெடுக்கப்பட்டது.வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் குறித்த கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க கோரியும், கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்தை நிறுத்தக் கோரியும், இந்த கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.அதற்கமைய தென்மராட்சிப் பிரதேசத்தின் கொடிகாமம் மற்றும் சாவகச்சேரி பகுதிகளில் கையெழுத்துக்கள் பெறப்பட்டன.கையெழுத்துப் போராட்டத்தில் சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர் ஞானப்பிரகாசம் கிசோர், சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர்கள் செ.மயூரன், கு.தினேஸ் ஆகியோரும் இணைந்திருந்தனர்.