• Nov 25 2024

இலத்திரனியல் கடவுச்சீட்டுகள் கொள்வனவிற்கான ஒப்பந்தம் கைச்சாத்து

Tharun / May 20th 2024, 6:19 pm
image

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் 5,000,000 இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், பொதுப் பாதுகாப்பு அமைச்சில் 5,000,000 இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கான உடன்படிக்கை  அண்மையில் கைச்சாத்திடப்பட்டது.

பயோமெட்ரிக் தரவுகளுடன் கூடிய கடவுச்சீட்டை வைத்திருப்பதன் மூலம், நாடு விட்டு நாடு பயணிக்கும்போது, ​​மக்களை மிகவும் துல்லியமாகவும் விரைவாகவும் அடையாளம் கண்டுகொள்வதன் மூலம், தடையின்றி எளிதாகவும் ஒரு நாட்டிற்குள் நுழைய முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை இலத்திரனியல் கடவுச்சீட்டுகள் கிடைப்பதன் மூலம் விசா பெறுவதற்கான செயன்முறையை துரிதப்படுத்த முடியும் என பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலத்திரனியல் கடவுச்சீட்டுகள் கொள்வனவிற்கான ஒப்பந்தம் கைச்சாத்து குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் 5,000,000 இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டுள்ளது.குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், பொதுப் பாதுகாப்பு அமைச்சில் 5,000,000 இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கான உடன்படிக்கை  அண்மையில் கைச்சாத்திடப்பட்டது.பயோமெட்ரிக் தரவுகளுடன் கூடிய கடவுச்சீட்டை வைத்திருப்பதன் மூலம், நாடு விட்டு நாடு பயணிக்கும்போது, ​​மக்களை மிகவும் துல்லியமாகவும் விரைவாகவும் அடையாளம் கண்டுகொள்வதன் மூலம், தடையின்றி எளிதாகவும் ஒரு நாட்டிற்குள் நுழைய முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.இதேவேளை இலத்திரனியல் கடவுச்சீட்டுகள் கிடைப்பதன் மூலம் விசா பெறுவதற்கான செயன்முறையை துரிதப்படுத்த முடியும் என பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement