இலங்கை பாரிய பொருளாதார, அரசியல் பின்னடைவை சந்திக்க நிறைவேற்று அதிகாரமே காரணம் என்பதை சிங்கள மக்கள் விரைவில் உணர வேண்டும் என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கைத்தீவு 1977 ஆண்டில் இருந்து இன்று வரை மிகப் பாரிய பொருளாதார அரசியல் பின்னடைவை சந்தித்துள்ளது என்றால் நிறைவேற்று அதிகாரம் உடைய ஜனாதிபதி முறையைக் கொண்ட ஒற்றையாட்சி அரசியல் அமைப்பு என்பதை சிங்கள மக்கள் எதிர்வரும் நாட்களில் தெளிவாக உணர்வார்கள்.
கறுப்பு யூலைப் படுகொலையில் இருந்து முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வரை சகோதர இனத்தை அழிப்பதற்கு அக்காலப்பகுதி ஜனாதிபதிகளுக்கு கிடைத்த நிறைவேற்று அதிகாரமே மிகப் பிரதான காரணம்.
நாட்டில் இனவாதமும் மதவாதமும் மேலோங்கி தொடர்ந்து நாடு மிகப் பெரும் அதள பாதாளத்தில் தள்ளப்பட்டமைக்கு ஒற்றையாட்சி அரசியல் அமைப்பும் அதில் மேலோங்கியுள்ள நிறைவேற்று அதிகாரமுமே காரணம்.
எதிர்காலத்தில் நாட்டை பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் முன்நோக்கி கொண்டு செல்ல இனவாதம் மற்றும் மதவாதங்களை கட்டுப்படுத்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை நீக்கி சமஸ்டி அடிப்படையிலான அரசில் அமைப்பின் மூலம் சிறிலங்காவை ஐக்கிய இலங்கையாக மாற்றுவதன் மூலமே நிரந்தர மாற்றத்தை உருவாக்கலாம்.
சிங்கள மக்கள் நாட்டின் பல்லின சகோதரத்துவத்தை புறம் ஒதுக்காது கட்டியணைத்து அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை ஏற்படுத்த உறுதி மொழி தரும் புதிய தலைவர்களை தெரிவு செய்வதன் மூலமே புதிய மாற்றத்தை( சிஸ்டம் சேஞ்) உருவாக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
நிறைவேற்று அதிகாரமே நாட்டை அழித்தது என்பதை சிங்கள மக்கள் விரைவில் உணர்வார்கள்- சபா.குகதாஸ் சுட்டிக்காட்டு. இலங்கை பாரிய பொருளாதார, அரசியல் பின்னடைவை சந்திக்க நிறைவேற்று அதிகாரமே காரணம் என்பதை சிங்கள மக்கள் விரைவில் உணர வேண்டும் என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,இலங்கைத்தீவு 1977 ஆண்டில் இருந்து இன்று வரை மிகப் பாரிய பொருளாதார அரசியல் பின்னடைவை சந்தித்துள்ளது என்றால் நிறைவேற்று அதிகாரம் உடைய ஜனாதிபதி முறையைக் கொண்ட ஒற்றையாட்சி அரசியல் அமைப்பு என்பதை சிங்கள மக்கள் எதிர்வரும் நாட்களில் தெளிவாக உணர்வார்கள்.கறுப்பு யூலைப் படுகொலையில் இருந்து முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வரை சகோதர இனத்தை அழிப்பதற்கு அக்காலப்பகுதி ஜனாதிபதிகளுக்கு கிடைத்த நிறைவேற்று அதிகாரமே மிகப் பிரதான காரணம்.நாட்டில் இனவாதமும் மதவாதமும் மேலோங்கி தொடர்ந்து நாடு மிகப் பெரும் அதள பாதாளத்தில் தள்ளப்பட்டமைக்கு ஒற்றையாட்சி அரசியல் அமைப்பும் அதில் மேலோங்கியுள்ள நிறைவேற்று அதிகாரமுமே காரணம்.எதிர்காலத்தில் நாட்டை பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் முன்நோக்கி கொண்டு செல்ல இனவாதம் மற்றும் மதவாதங்களை கட்டுப்படுத்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை நீக்கி சமஸ்டி அடிப்படையிலான அரசில் அமைப்பின் மூலம் சிறிலங்காவை ஐக்கிய இலங்கையாக மாற்றுவதன் மூலமே நிரந்தர மாற்றத்தை உருவாக்கலாம்.சிங்கள மக்கள் நாட்டின் பல்லின சகோதரத்துவத்தை புறம் ஒதுக்காது கட்டியணைத்து அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை ஏற்படுத்த உறுதி மொழி தரும் புதிய தலைவர்களை தெரிவு செய்வதன் மூலமே புதிய மாற்றத்தை( சிஸ்டம் சேஞ்) உருவாக்க முடியும் எனவும் தெரிவித்தார்.