• Jul 31 2025

வெள்ளத்தில் சிக்கிய தங்கை- காப்பாற்ற சென்ற அண்ணன்; பதற்றத்தை ஏற்படுத்திய காட்சி தமிழகத்தில் சம்பவம்!

shanuja / Jul 30th 2025, 1:33 pm
image

மழை வெள்ளத்தில் சிக்கி தங்கையை காப்பாற்றச் சென்ற அண்ணனும் வெள்ளத்தில்  அடித்துச் செல்லப்பட்ட காட்சி  ஒரு கணம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 


தமிழகத்தின் விதிஷா மாவட்டத்தில் உள்ள ஜாராஸ்பூர் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 


விதிஷா மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகக் கனமழை பெய்து வருகின்றது. 


கனமழையால் ஜாராஸ்பூர் பகுதியில் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் வழிந்தோடிய வண்ணம் காணப்பட்டது. 


அந்தப் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த சிறுமி ஒருவர் திடீரென வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். அதனை அவதானித்த அவரது அண்ணனான சிறுவன் தங்கையைக் காப்பாற்ற வெள்ளத்திற்குள் ஓடிச் சென்றுள்ளார். 


எனினும் அண்ணனான சிறுவனும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். சிறுவர்கள் இருவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதை அங்கு நின்றவர்கள் அவதானித்து பின்னர் சிறுவர்கள் இருவரையும் வெள்ளத்திலிருந்து மீட்டனர். 


கனமழையால் ஏற்பட்டவெள்ளத்தால் அந்தப் பகுதியிலுள்ள பாடசாலைகளுக்கு இரண்டு நாட்களுக்கு  விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. 


விடுமுறையில் இருந்த  சிறுவர்களே இவ்வாறு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளிவந்து ஒரு கணம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளத்தில் சிக்கிய தங்கை- காப்பாற்ற சென்ற அண்ணன்; பதற்றத்தை ஏற்படுத்திய காட்சி தமிழகத்தில் சம்பவம் மழை வெள்ளத்தில் சிக்கி தங்கையை காப்பாற்றச் சென்ற அண்ணனும் வெள்ளத்தில்  அடித்துச் செல்லப்பட்ட காட்சி  ஒரு கணம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் விதிஷா மாவட்டத்தில் உள்ள ஜாராஸ்பூர் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. விதிஷா மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகக் கனமழை பெய்து வருகின்றது. கனமழையால் ஜாராஸ்பூர் பகுதியில் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் வழிந்தோடிய வண்ணம் காணப்பட்டது. அந்தப் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த சிறுமி ஒருவர் திடீரென வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். அதனை அவதானித்த அவரது அண்ணனான சிறுவன் தங்கையைக் காப்பாற்ற வெள்ளத்திற்குள் ஓடிச் சென்றுள்ளார். எனினும் அண்ணனான சிறுவனும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். சிறுவர்கள் இருவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதை அங்கு நின்றவர்கள் அவதானித்து பின்னர் சிறுவர்கள் இருவரையும் வெள்ளத்திலிருந்து மீட்டனர். கனமழையால் ஏற்பட்டவெள்ளத்தால் அந்தப் பகுதியிலுள்ள பாடசாலைகளுக்கு இரண்டு நாட்களுக்கு  விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறையில் இருந்த  சிறுவர்களே இவ்வாறு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளிவந்து ஒரு கணம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement