• Jun 26 2024

அக்காவின் காதலனால் தங்கைக்கு நேர்ந்த கொடூரம் - தமிழர் பகுதியில் நடந்த சம்பவம்

Chithra / May 24th 2024, 7:42 am
image

Advertisement

 

கிளிநொச்சியில்  14 வயது சிறுமியொருவர் அவரது அக்காவின் காதலனால் தகாத செயற்பாட்டிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் 118 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து குறித்த தகவல் கிளிநொச்சி பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே மேற்படி விடயம் தெரியவந்துள்ளது.

கிளிநொச்சி - மலையாளபுரத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி அவரது அக்காவின் காதலனால் தகாத செயற்பாட்டிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும், 

பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் பரிசோதனைக்கு அனுமதிக்கப்படடுள்ளதாகவும் கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்த போதும் குறித்த நபர் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

அக்காவின் காதலனால் தங்கைக்கு நேர்ந்த கொடூரம் - தமிழர் பகுதியில் நடந்த சம்பவம்  கிளிநொச்சியில்  14 வயது சிறுமியொருவர் அவரது அக்காவின் காதலனால் தகாத செயற்பாட்டிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் 118 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.இதைத்தொடர்ந்து குறித்த தகவல் கிளிநொச்சி பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே மேற்படி விடயம் தெரியவந்துள்ளது.கிளிநொச்சி - மலையாளபுரத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி அவரது அக்காவின் காதலனால் தகாத செயற்பாட்டிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் பரிசோதனைக்கு அனுமதிக்கப்படடுள்ளதாகவும் கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்த போதும் குறித்த நபர் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement