• Jan 07 2025

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்

Chithra / Dec 29th 2024, 1:37 pm
image


ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சலோச்சன கமகே உள்ளிட்ட 6 பேர் அடுத்த மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் 90 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றுக் கொண்ட போது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டனர்.

டொரிங்டன் அவினியூ பகுதியில் அமைந்துள்ள காணியொன்றை நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் ஒப்படைத்த பின்னர் அந்த காணிக்கான நட்டஈடு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பதிலாக சந்தேகநபர்களினால் இலஞ்சம் பெறப்பட்டுள்ளது.


முன்னாள் மாகாண சபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல் ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சலோச்சன கமகே உள்ளிட்ட 6 பேர் அடுத்த மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.சந்தேகநபர்கள் கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.சந்தேகநபர்கள் 90 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றுக் கொண்ட போது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டனர்.டொரிங்டன் அவினியூ பகுதியில் அமைந்துள்ள காணியொன்றை நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் ஒப்படைத்த பின்னர் அந்த காணிக்கான நட்டஈடு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பதிலாக சந்தேகநபர்களினால் இலஞ்சம் பெறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement