சவுதி அரேபிய பாலைவனத்தில் முதல் முறையாக பனிப்பொழிவு ஏற்பட்டிருப்பது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
சவுதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக பலத்த சூறாவளிக் காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் சவுதி அரேபியாவின் அல்-ஜாவ்ப் பகுதியில் முதல் முறையாக பனிப்பொழிவு நிகழ்ந்துள்ளது. வறண்ட பாலைவன நிலப்பரப்பை மூச்சடைக்க வைக்கும் வகையில் இந்த குளிர்க்கால அதிசயம் அரங்கேறியுள்ளது.
கலீஜ் டைம்ஸின் வெளியிட்டுள்ள செய்தியின்படி, கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை ஆகியவற்றை தொடர்ந்து இந்த பனிப்பொழிவு நிகழ்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பாலைவனப் பகுதியில் பனிப்பொழிவு வெண் பட்டுப்போல் போர்த்தியிருப்பதை நெட்டிசன்கள் தங்களின் சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்களாகவும் வீடியோக்களாகவும் ஷேர் செய்து வருகின்றனர்.
பாலைவனப் பகுதியில் பனிப்பொழிவு ஏற்பட்டிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அரேபிய கடலில் இருந்து உருவாகி ஓமன் வரை நீண்டு இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமே சமீபத்தில் பெய்த ஆலங்கட்டி மழைக்கு காரணம் என ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது.
சவுதி அரேபிய பாலைவனத்தை மூடிய பனிப்பொழிவு சவுதி அரேபிய பாலைவனத்தில் முதல் முறையாக பனிப்பொழிவு ஏற்பட்டிருப்பது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.சவுதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக பலத்த சூறாவளிக் காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் சவுதி அரேபியாவின் அல்-ஜாவ்ப் பகுதியில் முதல் முறையாக பனிப்பொழிவு நிகழ்ந்துள்ளது. வறண்ட பாலைவன நிலப்பரப்பை மூச்சடைக்க வைக்கும் வகையில் இந்த குளிர்க்கால அதிசயம் அரங்கேறியுள்ளது.கலீஜ் டைம்ஸின் வெளியிட்டுள்ள செய்தியின்படி, கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை ஆகியவற்றை தொடர்ந்து இந்த பனிப்பொழிவு நிகழ்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பாலைவனப் பகுதியில் பனிப்பொழிவு வெண் பட்டுப்போல் போர்த்தியிருப்பதை நெட்டிசன்கள் தங்களின் சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்களாகவும் வீடியோக்களாகவும் ஷேர் செய்து வருகின்றனர்.பாலைவனப் பகுதியில் பனிப்பொழிவு ஏற்பட்டிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அரேபிய கடலில் இருந்து உருவாகி ஓமன் வரை நீண்டு இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமே சமீபத்தில் பெய்த ஆலங்கட்டி மழைக்கு காரணம் என ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது.