2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து மே மாதம் 08 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் நாடளாவிய ரீதியில் 43 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 43 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 29 பேர் உயிரிழந்துள்ளதுடன் 23 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 94 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கொட்டாவை, மாலபல்ல பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட நபர் களுத்துறை - எதனமடல பிரதேசத்தில் பாதாளக்குழு தலைவர் சமயங் உள்ளிட்ட தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட கொலை சம்பவத்தின் 8 ஆவது பிரதிவாதி எனத் தெரியவந்துள்ளது.
உடவலவ பிரதேசத்தில் நால்வர் கொல்லப்பட்டமை தொடர்பில் உயிரிழந்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொட்டாவை - மாலபல்ல - விகாரை வீதியில் நேற்று இரவு 8 மணிக்கு உந்துருளியில் செல்லும் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இந்த நபர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் 43 வயதுடைய எம்பிலிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாண்டு இதுவரை 43 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 29 பேர் பலி 2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து மே மாதம் 08 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் நாடளாவிய ரீதியில் 43 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.அதன்படி, 43 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 29 பேர் உயிரிழந்துள்ளதுடன் 23 பேர் காயமடைந்துள்ளனர்.இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 94 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் கொட்டாவை, மாலபல்ல பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட நபர் களுத்துறை - எதனமடல பிரதேசத்தில் பாதாளக்குழு தலைவர் சமயங் உள்ளிட்ட தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட கொலை சம்பவத்தின் 8 ஆவது பிரதிவாதி எனத் தெரியவந்துள்ளது.உடவலவ பிரதேசத்தில் நால்வர் கொல்லப்பட்டமை தொடர்பில் உயிரிழந்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.கொட்டாவை - மாலபல்ல - விகாரை வீதியில் நேற்று இரவு 8 மணிக்கு உந்துருளியில் செல்லும் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இந்த நபர் உயிரிழந்தார்.உயிரிழந்தவர் 43 வயதுடைய எம்பிலிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.