• Apr 29 2026

சிறார்களுக்குச் சமூக ஊடகத் தடை; கடுமையாகும் சட்டம்.! எங்கு தெரியுமா?

Aathira / Jan 28th 2026, 8:45 pm
image

இந்தியாவின் பிரபலமான சுற்றுலா மாநிலமான கோவா, ஆஸ்திரேலியாவைப் போலவே 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்வது தொடர்பாக பரிசீலித்து வருகிறது.

இதற்காக ஆஸ்திரேலியாவில் நடைமுறையில் உள்ள சட்டங்களை ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதன் மூலம் சிறுவர்களின் மனநலத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த முடிவு குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இதன் அடிப்படையில், மெட்டா, யூடியூப், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை சிறார்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன.

கடந்த ஆண்டு, 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதித்த முதல் நாடாக ஆஸ்திரேலியா திகழ்ந்தது.

அந்தத் தடை அமல்படுத்தப்பட்ட முதல் மாதத்திலேயே, 4.7 மில்லியன் பதின்ம வயதினரின் சமூக ஊடகக் கணக்குகள் செயலிழக்கச் செய்யப்பட்டன.

இதேபோன்ற சட்டங்களை நடைமுறைப்படுத்தும் நோக்கில், ஆஸ்திரேலியாவின் போக்கைக் கவனித்து வரும் நாடுகளின் பட்டியலில் பிரான்ஸ், இந்தோனேசியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளும் இடம்பெறுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறார்களுக்குச் சமூக ஊடகத் தடை; கடுமையாகும் சட்டம். எங்கு தெரியுமா இந்தியாவின் பிரபலமான சுற்றுலா மாநிலமான கோவா, ஆஸ்திரேலியாவைப் போலவே 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்வது தொடர்பாக பரிசீலித்து வருகிறது.இதற்காக ஆஸ்திரேலியாவில் நடைமுறையில் உள்ள சட்டங்களை ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதன் மூலம் சிறுவர்களின் மனநலத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த முடிவு குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.இதன் அடிப்படையில், மெட்டா, யூடியூப், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை சிறார்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன.கடந்த ஆண்டு, 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதித்த முதல் நாடாக ஆஸ்திரேலியா திகழ்ந்தது.அந்தத் தடை அமல்படுத்தப்பட்ட முதல் மாதத்திலேயே, 4.7 மில்லியன் பதின்ம வயதினரின் சமூக ஊடகக் கணக்குகள் செயலிழக்கச் செய்யப்பட்டன.இதேபோன்ற சட்டங்களை நடைமுறைப்படுத்தும் நோக்கில், ஆஸ்திரேலியாவின் போக்கைக் கவனித்து வரும் நாடுகளின் பட்டியலில் பிரான்ஸ், இந்தோனேசியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளும் இடம்பெறுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement