• Jul 08 2024

6 நாட்களுக்கு சமூக வலைத்தளங்களுக்கு தடை; அரசு அதிரடி - அதிர்ச்சியில் மக்கள்.!

Chithra / Jul 5th 2024, 11:22 am
image

Advertisement


ஜூலை 13 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை ஒரு வாரத்திற்கு சமூக வலைத்தளங்களை பயன்படுத்த  பாகிஸ்தானில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான பாகிஸ்தான் மக்கள் வட்ஸ்அப், பேஸ்புக், டிக்டொக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் போன்ற  சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் முகரம் பண்டியை முன்னிட்டு ஜூலை 13-ஆம் திகதி முதல் ஜூலை 18-ஆம் திகதி வரை  பஞ்சாப் மாகாணத்தில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என அம்மாகாண முதல்வர் மரியம் நவாஸின் சட்டம் ஒழுங்கிற்கான அமைச்சரவை குழு பரிந்துரை செய்துள்ளது.

வெறுப்பு பேச்சு, வன்முறை போன்ற சம்பவங்களை தவிர்க்க இந்த நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக பஞ்சாப் அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

பஞ்சாப் அரசு ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான மத்திய அரசுக்கு இது தொடர்பாக வேண்டுகோள் விடுத்துள்ளது. இதையடுத்து மத்திய அரசு தடைவிதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் இராணுவத்தின் தலைமை ஜெனரல் ஆசிம் முனிர் ஏற்கனவே, சமூக வலைத்தளங்களை தீய மீடியா என குறிப்பிட்டள்ளார். 

அவற்றை டிஜிட்டில் பயங்கரவாதம் என அழைத்த அவர், அதை எதிர்த்து போராடுவது அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் தேர்தல் முடிவுகள் மாற்றப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் எக்ஸ் தளம் முடக்கப்பட்டது.

பஞ்சாப் மாகாணத்தில் சுமார் 12 கோடி மக்கள் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

6 நாட்களுக்கு சமூக வலைத்தளங்களுக்கு தடை; அரசு அதிரடி - அதிர்ச்சியில் மக்கள். ஜூலை 13 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை ஒரு வாரத்திற்கு சமூக வலைத்தளங்களை பயன்படுத்த  பாகிஸ்தானில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.பெரும்பாலான பாகிஸ்தான் மக்கள் வட்ஸ்அப், பேஸ்புக், டிக்டொக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் போன்ற  சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் முகரம் பண்டியை முன்னிட்டு ஜூலை 13-ஆம் திகதி முதல் ஜூலை 18-ஆம் திகதி வரை  பஞ்சாப் மாகாணத்தில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என அம்மாகாண முதல்வர் மரியம் நவாஸின் சட்டம் ஒழுங்கிற்கான அமைச்சரவை குழு பரிந்துரை செய்துள்ளது.வெறுப்பு பேச்சு, வன்முறை போன்ற சம்பவங்களை தவிர்க்க இந்த நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக பஞ்சாப் அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.பஞ்சாப் அரசு ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான மத்திய அரசுக்கு இது தொடர்பாக வேண்டுகோள் விடுத்துள்ளது. இதையடுத்து மத்திய அரசு தடைவிதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.பாகிஸ்தான் இராணுவத்தின் தலைமை ஜெனரல் ஆசிம் முனிர் ஏற்கனவே, சமூக வலைத்தளங்களை தீய மீடியா என குறிப்பிட்டள்ளார். அவற்றை டிஜிட்டில் பயங்கரவாதம் என அழைத்த அவர், அதை எதிர்த்து போராடுவது அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.கடந்த பெப்ரவரி மாதம் தேர்தல் முடிவுகள் மாற்றப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் எக்ஸ் தளம் முடக்கப்பட்டது.பஞ்சாப் மாகாணத்தில் சுமார் 12 கோடி மக்கள் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement