• Jul 27 2025

மட்டக்களப்பில் சூரிய மின் உற்பத்தி நிலையம் திறந்துவைப்பு!

shanuja / Jul 26th 2025, 10:20 pm
image

மட்டக்களப்பு நாவற்காடு பகுதியில் சூர்யசக்தி லிமிடெட் நிறுவனத்தால் கட்டப்பட்ட 10 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையம், இன்று எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி  உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.


10 மெகாவாட் மின் சக்தி குறித்த சூரிய மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து தேசிய மின் கட்டமைப்புடன் இன்று முதல் இணைக்கப்பட்டதுடன், குறித்த சூரிய மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் மற்றும் கட்டமைப்புக்களை அமைச்சர் உள்ளிட்ட அதிதிகள் பார்வையிட்டனர். 


குறித்த மின் உற்பத்தி நிலையத்தினால் வவுணதீவு பிரதேசத்தில் உள்ள பாடசாலைகள், விளையாட்டு கழகங்கள் போன்றவற்றிற்கு தேவைப்பாடாக காணப்பட்ட பல இலட்சம் பெறுமதிமிக்க தேவைப்பாடுகள் அமைச்சரினால் வழங்கிவைக்கப்பட்டது.


குறித்த நிகழ்விற்கு விசேட அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன், மின்சார சபையின் உயரதிகாரிகள், மண்முனை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர், பிரதி தவிசாளர் உள்ளிட்ட பிரதேச சபையின் பிரதிநிதிகள், பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.

மட்டக்களப்பில் சூரிய மின் உற்பத்தி நிலையம் திறந்துவைப்பு மட்டக்களப்பு நாவற்காடு பகுதியில் சூர்யசக்தி லிமிடெட் நிறுவனத்தால் கட்டப்பட்ட 10 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையம், இன்று எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி  உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.10 மெகாவாட் மின் சக்தி குறித்த சூரிய மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து தேசிய மின் கட்டமைப்புடன் இன்று முதல் இணைக்கப்பட்டதுடன், குறித்த சூரிய மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் மற்றும் கட்டமைப்புக்களை அமைச்சர் உள்ளிட்ட அதிதிகள் பார்வையிட்டனர். குறித்த மின் உற்பத்தி நிலையத்தினால் வவுணதீவு பிரதேசத்தில் உள்ள பாடசாலைகள், விளையாட்டு கழகங்கள் போன்றவற்றிற்கு தேவைப்பாடாக காணப்பட்ட பல இலட்சம் பெறுமதிமிக்க தேவைப்பாடுகள் அமைச்சரினால் வழங்கிவைக்கப்பட்டது.குறித்த நிகழ்விற்கு விசேட அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன், மின்சார சபையின் உயரதிகாரிகள், மண்முனை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர், பிரதி தவிசாளர் உள்ளிட்ட பிரதேச சபையின் பிரதிநிதிகள், பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement